தமிழக அரசுப் பள்ளிகளில் மாதந்தோறும் வினாடி வினா போட்டி.. ‘சொல்! வெல்!’ திட்டம் அறிமுகம்!

Sol Vel Quiz Scheme: தமிழக அரசுப் பள்ளிகளில் மாதந்தோறும் வினாடி வினா போட்டியான ‘சொல்! வெல்!’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

Published on: October 18, 2026 at 12:00 pm

சென்னை, அக்.18, 2026: தமிழகத்தில் அரசு நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக ‘சொல்! வெல்!’ (Sol! Vel!) என்ற பெயரில் புதிய வினாடி வினா மன்றத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாதந்தோறும் வினாடி வினா மன்றச் செயல்பாடுகளை நடத்த பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதற்காக ஒவ்வொரு மாதமும் ஒரு பாடவேளையை ஒதுக்க வேண்டும் என்றும், 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான ஒவ்வொரு வகுப்புப் பிரிவுக்கும் ஒரு ஆசிரியரைப் பொறுப்பாளராக நியமிக்க வேண்டும் என்றும் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாணவர்களுக்குத் தேவையான வினாடி வினா பயிற்சிப் பாடப் பொருட்கள் பள்ளிக் கல்வித் துறையின் EMIS இணையதளத்தில் வழங்கப்படும். பொறுப்பு ஆசிரியர்கள் அவற்றைப் பதிவிறக்கம் செய்து, மாணவர்களுக்கு வினாக்களின் வகைகள், போட்டி நடைமுறைகள் மற்றும் சுற்றுகள் குறித்து பயிற்சி அளிக்க வேண்டும்.

மாணவர்களின் பொது அறிவை மேம்படுத்துதல், கேள்வி கேட்கும் ஆர்வத்தை வளர்த்தல், தகவல்களைத் தொடர்புபடுத்திச் சிந்தித்தல், கவனிப்பு, புரிதல், நினைவாற்றல் மற்றும் விரைவாகச் சிந்திக்கும் திறனை மேம்படுத்துதல் ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும். போட்டிகளில் பங்கேற்கும் சில மாணவர்களுக்கு மட்டுமின்றி, 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் இதில் பங்கேற்கும் வகையில் செயல்பாடுகளை முன்னெடுக்க பள்ளிக் கல்வித் துறை வலியுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க : ரயில்வேயில் 1,688 காலிப்பணியிடங்கள்.. 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு வேலைவாய்ப்பு.. 8-ம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை விண்ணப்பிக்கலாம்!
Tirunelveli Job Notification

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு வேலைவாய்ப்பு.. 8-ம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை விண்ணப்பிக்கலாம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com