Railway Recruitment 2026: ரயில்வேயில் 1,688 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Railway Recruitment 2026: ரயில்வேயில் 1,688 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published on: October 17, 2026 at 10:04 pm
சென்னை, அக்.17, 2026: இந்திய ரயில்வேயில் 1,688 இளநிலைப் பிரிவு பணியிடங்களை நிரப்புவதற்கான RRB NTPC 2026 வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பின்படி, வணிகம் மற்றும் டிக்கெட் வழங்கும் எழுத்தர், கணக்கு எழுத்தர், இளநிலை எழுத்தர், ரயில் எழுத்தர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
மொத்தமுள்ள 1,688 பணியிடங்களில், வணிகம் மற்றும் டிக்கெட் வழங்கும் எழுத்தர் பணிக்கு 700 இடங்களும், கணக்கு எழுத்தர் மற்றும் தட்டச்சர் பணிக்கு 200 இடங்களும், இளநிலை எழுத்தர் மற்றும் தட்டச்சர் பணிக்கு 600 இடங்களும், ரயில் எழுத்தர் பணிக்கு 188 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் 2027 ஜனவரி 1ஆம் தேதியன்று 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி எஸ்சி, எஸ்டி, ஓபிசி உள்ளிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும். பணியிடங்களுக்கு ஏற்ப மாதச் சம்பளம் ரூ.19,900 முதல் ரூ.21,700 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தகுதியுள்ளவர்கள் அக்டோபர் 15ஆம் தேதி தொடங்கிய ஆன்லைன் விண்ணப்பப் பதிவை, நவம்பர் 13, 2026 இரவு 11.59 மணிக்குள் நிறைவு செய்ய வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த நவம்பர் 15ஆம் தேதி கடைசி நாளாகும். ஆர்வமுள்ளவர்கள் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகி, முழுமையான அறிவிப்பைப் படித்த பின்னர் விண்ணப்பிக்கலாம்.
இதையும் படிங்க : ஆசிரியர் டெட் தேர்வு முடிவுகள் வெளியீடு.. ஆன்லைனில் பார்ப்பது எப்படி?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com