வீரமணி வழக்கில் சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி.. சென்னை உயர் நீதிமன்றம்

Veeramani Case Verdict: வீரமணி வழக்கில் சிபிஐ விசாரணை கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Published on: October 17, 2026 at 9:53 pm

சென்னை, அக்.17, 2026: ஜெம் கிரானைட்ஸ் நிறுவன உரிமையாளர் ஆர். வீரமணிக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட சிறார் பாலியல் வன்கொடுமை வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்தது. சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) விசாரணை நடத்தி வரும் நிலையில், வழக்கை சிபிஐக்கு மாற்ற நீதிமன்றம் மறுத்துள்ளது.

தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் அடங்கிய அமர்வு முன்பு, சமூக ஆர்வலர் ஜி. தேவராஜன் தாக்கல் செய்த பொதுநல மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 6 வழக்குகள் பாலியல் வன்கொடுமை தொடர்பானவை என்றும், ஒரு வழக்கு பாலியல் வன்கொடுமையைத் தொடர்ந்து தற்கொலை நிகழ்ந்தது தொடர்பானது என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இந்த வழக்குகளில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

விசாரணை ஆரம்பக்கட்டத்தில் இருப்பதையும், இதே கோரிக்கை தொடர்பாக ஏற்கெனவே மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். மேலும், வழக்கு தொடர்பாக மற்றொரு நீதிபதி முன்பு விசாரணை நடைபெற்று வருவதால், தற்போதைய மனுவைத் தொடர்ந்து விசாரிப்பதில் அவசியமில்லை எனத் தெரிவித்தனர்.

இதையடுத்து, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் மனுவைத் திரும்பப் பெற அனுமதி கோரினார். அதற்கு அனுமதி அளித்த நீதிமன்றம், மனுவைத் திரும்பப் பெற்றதாகக் கூறி தள்ளுபடி செய்தது. அதேவேளையில், இந்த வழக்கில் முறையான விசாரணை நடைபெறுவதை உறுதி செய்வோம் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

இதையும் படிங்க : 2025 நிதியாண்டில் தி.மு.க, அ.தி.மு.க.வுக்கு லாட்டரி நிறுவனம் நன்கொடை.. எவ்வளவு தெரியுமா?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com