திருமலையில் நவராத்திரி பிரம்மோற்சவம்.. பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி தரிசனம்!

Tirumala Festival Begins: திருமலையில் நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்கியது; பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி தரிசனம் கொடுத்தார்.

Published on: October 13, 2026 at 7:21 pm

திருப்பதி, அக்.13, 2026: திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நேற்று (அக்டோபர் 12) கோலாகலமாகத் தொடங்கியது. விழாவின் முதல் நாளில் காலையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி தங்கத் திருச்சி வாகனத்தில் நான்கு மாட வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலையில் ஏழு தலைகளைக் கொண்ட பெரிய சேஷ வாகனத்தில் சுவாமி எழுந்தருளிய நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த நவராத்திரி பிரம்மோற்சவம் அக்டோபர் 20-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இன்று (அக்டோபர் 13) காலையில் சின்ன சேஷ வாகனத்திலும், மாலையில் அன்ன வாகனத்திலும் மலையப்ப சுவாமி எழுந்தருளினார். தொடர்ந்து சிம்ம வாகனம், முத்துப்பந்தல் வாகனம், கற்பக விருட்ச வாகனம், சர்வபூபால வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனச் சேவைகள் நடைபெற உள்ளன.

விழாவின் முக்கிய நிகழ்வான கருட வாகனச் சேவை அக்டோபர் 16-ஆம் தேதி மாலை நடைபெற உள்ளது. இதையொட்டி பக்தர்களின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், திருமலை திருப்பதி தேவஸ்தானம் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. விழா நாட்களில் காலை வாகனச் சேவைகள் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், மாலைச் சேவைகள் இரவு 7 மணி முதல் 9 மணி வரையிலும் நடைபெறும். கருட வாகனச் சேவை மட்டும் மாலை 6.30 மணிக்குத் தொடங்கும். அக்டோபர் 20-ஆம் தேதி சக்கர ஸ்நானத்துடன் விழா நிறைவடைகிறது.

இதையும் படிங்க :2026 நவராத்திரி பூஜை எப்போது தொடங்கும்? வீட்டிலேயே பூஜிப்பது எப்படி?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com