Onion Price Rise: வெங்காயம் விலை உயர்வு எதிரொலியாக இந்தியாவின் சில்லறைப் பணவீக்கம் 5.54% ஆக அதிகரித்துள்ளது.
Onion Price Rise: வெங்காயம் விலை உயர்வு எதிரொலியாக இந்தியாவின் சில்லறைப் பணவீக்கம் 5.54% ஆக அதிகரித்துள்ளது.

Published on: October 13, 2026 at 4:42 pm
சென்னை, அக்.13, 2026: இந்தியாவில் சில்லறைப் பணவீக்கம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 4.83 சதவீதமாக இருந்த நிலையில், செப்டம்பர் மாதத்தில் 5.54 சதவீதமாக உயர்ந்துள்ளது. மத்திய அரசின் புள்ளிவிவரங்களின்படி, உணவுப் பொருட்களின் விலை உயர்வே இதற்கு முக்கியக் காரணமாகும். புதிய நுகர்வோர் விலைக் குறியீட்டுத் தொடரின் அடிப்படையில், ஜனவரி மாதத்துக்குப் பிறகு பதிவான அதிகபட்ச பணவீக்க அளவு இதுவாகும்.
உணவுப் பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 5.97 சதவீதமாக இருந்த நிலையில், செப்டம்பரில் 7.74 சதவீதமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, வெங்காயத்தின் விலை கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது 108.09 சதவீதம் உயர்ந்துள்ளது. இஞ்சி, பூண்டு, எலுமிச்சை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் கணிசமாக அதிகரித்துள்ளன.
கிராமப்புறங்களில் சில்லறைப் பணவீக்கம் 6.08 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 4.88 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது. உணவுப் பணவீக்கமும் கிராமப்புறங்களில் 8.06 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 7.18 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. மேலும், மாநிலங்களில் தமிழ்நாடு 6.81 சதவீத பணவீக்கத்துடன் அதிக அளவைப் பதிவு செய்துள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குடும்பங்களின் மாதாந்திரச் செலவுகளை அதிகரிக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : தமிழ்நாட்டில் அரசி கிலோ ரூ.20 உயர்வு.. புதிய விலையை நோட் பண்ணுங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com