TN Employees Asset Declaration: தமிழக அரசு ஊழியர்கள் சொத்து விவரங்களை 31ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பதவி உயர்வுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
TN Employees Asset Declaration: தமிழக அரசு ஊழியர்கள் சொத்து விவரங்களை 31ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பதவி உயர்வுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

Published on: October 9, 2026 at 3:34 pm
Updated on: October 9, 2026 at 3:58 pm
சென்னை, அக்.9, 2026: தமிழக அரசு ஊழியர்கள் தங்களுடைய அசையும் மற்றும் அசையா சொத்துகள், வங்கிச் சேமிப்புகள், முதலீடுகள், கடன்கள் உள்ளிட்ட அனைத்து நிதி விவரங்களையும் வரும் 31ஆம் தேதிக்குள் IFHRMS இணையதளத்தில் பதிவு செய்து சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காகவும், அரசு ஊழியர்களின் சொத்து விவரங்களை முறைப்படுத்துவதற்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதன்படி, ஊழியர்கள் தங்களுக்குச் சொந்தமான வீடுகள், நிலங்கள், வாகனங்கள் உள்ளிட்ட சொத்துகளின் விவரங்களுடன், சேமிப்பு மற்றும் கடன் தொடர்பான தகவல்களையும் உரிய முறையில் பதிவேற்ற வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் அனைத்து விவரங்களையும் முழுமையாகச் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தனது பெயரில் மட்டுமின்றி, வேறு நபர்களின் பெயரில் சொத்துகள் வாங்கியிருந்தாலும், அவற்றின் விவரங்களையும் அரசு ஊழியர்கள் கட்டாயம் குறிப்பிட வேண்டும். மேலும், அந்த நபருக்கும் சம்பந்தப்பட்ட அரசு ஊழியருக்கும் உள்ள உறவுமுறையையும் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சொத்து விவரங்களை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் தாக்கல் செய்தவர்களின் பெயர்கள் மட்டுமே பதவி உயர்வுக்கான பரிசீலனைப் பட்டியலில் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவரங்களைச் சமர்ப்பிக்காதவர்கள் தமிழக அரசு ஊழியர்களுக்கான நன்னடத்தை விதிகளை மீறியவர்களாகக் கருதப்படுவார்கள்.
கடந்த 2025 டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த ஆண்டுக்கான சொத்து மற்றும் கடன் விவரங்களை 2026 அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், அரசு ஊழியர்கள் காலக்கெடுவுக்குள் தங்களது பதிவுகளைச் சரிபார்த்து முழுமையாகச் சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகியுள்ளது.
இதையும் படிங்க : புதுச்சேரி இடைத்தேர்தல்: டெபாசிட் இழந்த தி.மு.க.. மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்ட வேட்பாளர்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com