புதுச்சேரி இடைத்தேர்தல்: டெபாசிட் இழந்த தி.மு.க.. மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்ட வேட்பாளர்!

Puducherry By-Election: புதுச்சேரி இடைத்தேர்தலில் தி.மு.க டெபாசிட் இழந்த நிலையில், மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

Published on: October 9, 2026 at 3:17 pm

புதுச்சேரி, அக்.9, 2026: புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க. வேட்பாளர் கு. சேது செல்வம் டெபாசிட் தொகையை இழந்துள்ளார்.

அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற்ற இந்த இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9-ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஆளும் என்.ஆர். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அசோக் ஆனந்த் 13,358 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் இ. விநாயகம் 4,876 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார். தி.மு.க. வேட்பாளர் சேது செல்வம் 2,664 வாக்குகள் மட்டுமே பெற்று மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டார்.

இந்தத் தேர்தலில் அசோக் ஆனந்த் மொத்த வாக்குகளில் 61.12 சதவீதத்தைப் பெற்று வலுவான வெற்றியைப் பதிவு செய்தார். காங்கிரஸ் வேட்பாளர் 22.31 சதவீத வாக்குகளையும், தி.மு.க. வேட்பாளர் 12.19 சதவீத வாக்குகளையும் பெற்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் அ.மு. சலீம் 310 வாக்குகள் பெற்று நான்காவது இடத்தைப் பிடித்தார். இந்தத் தொகுதியில் மொத்தம் 80.81 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

இந்தத் தேர்தலில் வெற்றி பெறாத வேட்பாளர், செல்லுபடியாகும் மொத்த வாக்குகளில் ஆறில் ஒரு பங்குக்கும் அதிகமான வாக்குகளைப் பெறவில்லை என்றால், விதிகளின்படி அவரது டெபாசிட் தொகை பறிமுதல் செய்யப்படும். அந்த வகையில், தி.மு.க. வேட்பாளர் டெபாசிட்டை இழந்துள்ளார்.

முதலமைச்சர் என். ரங்கசாமி, கடந்த சட்டமன்றத் தேர்தலில் தட்டாஞ்சாவடி மற்றும் மங்கலம் ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மங்கலம் தொகுதியைத் தக்கவைத்துக் கொண்டு தட்டாஞ்சாவடி தொகுதியின் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்தத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான ஆளும் கூட்டணி, காங்கிரஸ் மற்றும் தி.மு.க. இடையே முக்கியப் போட்டி நிலவியது. தனித்துப் போட்டியிட்ட தி.மு.க. மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டதுடன், டெபாசிட்டையும் இழந்திருப்பது அக்கட்சிக்கு அரசியல் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

இதையும் படிங்க : 2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் கனவுத் திட்டம்.. முதல்வர் விஜய் நெக்ஸ்ட் மூவ்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com