பழனி அருகே அரசுப் பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு; அடையாளம் தெரியாத நபர் மீது வழக்கு

Palani School Water Tank Contamination: பழனி அருகே அரசுப் பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு காணப்பட்ட நிலையில், அடையாளம் தெரியாத நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Published on: October 9, 2026 at 11:11 am

திண்டுக்கல், அக்.9, 2026: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே மானூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. காலாண்டு விடுமுறைக்குப் பிறகு அக்டோபர் 5-ஆம் தேதி பள்ளி திறக்கப்பட்டபோது, பணியாளர்கள் தொட்டியை சோதனை செய்ததில் மனிதக் கழிவு போன்ற பொருள் இருந்தது தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தொட்டி உடனடியாக சுத்தம் செய்யப்பட்டதுடன், அந்தத் தண்ணீர் பயன்படுத்தப்படவில்லை.

இந்த விவகாரம் அக்டோபர் 7-ஆம் தேதி பெற்றோர் மற்றும் பொதுமக்களுக்கு தெரியவந்ததைத் தொடர்ந்து, அவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். தகவலறிந்த கீரனூர் போலீஸார் பள்ளிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். பள்ளி வளாகத்துக்குள் விடுமுறை நாட்களில் சிலர் அத்துமீறி நுழைந்து மது அருந்தியதாகக் கூறப்படும் தகவலின் அடிப்படையிலும் விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும், பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் அளித்த புகாரின் பேரில் அடையாளம் தெரியாத நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிசிடிவி காட்சிகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து குற்றவாளியை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளும் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளிக் கல்வித்துறை தரப்பில், சம்பந்தப்பட்ட சின்டெக்ஸ் தொட்டி மாணவர்களுக்கு நேரடியாக குடிநீர் வழங்க பயன்படுத்தப்படவில்லை என்றும், மாணவர்களுக்கு வேறு குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பள்ளி வளாகத்தின் பாதுகாப்பு மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என பெற்றோர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். சம்பவத்தில் தொடர்புடையவர்களை கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க : டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்.. அன்புமணி ராமதாஸ்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com