நடிகர் நானா படேகர் மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

Nana Patekar passed away: பழம்பெரும் பாலிவுட் நடிகர் நானா படேகர் தனது 75-வது வயதில் இன்று காலமானார். கோவாவில் உள்ள அவரது இல்லத்தில் அதிகாலை மயக்கமடைந்த நிலையில் காணப்பட்ட அவர், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Published on: October 8, 2026 at 1:31 pm

மும்பை, அக்டோபர் 8, 2026: பழம்பெரும் பாலிவுட் நடிகர் நானா படேகர் தனது 75-வது வயதில் இன்று (அக். 8) காலமானார். கோவாவில் உள்ள டோனா பவுலா இல்லத்தில் அவர் அதிகாலை மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டதாகவும், உடனடியாக மணிபால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் சுமார் 45 நிமிடங்கள் அவரை மீட்க முயன்றும் பலனளிக்காத நிலையில், காலை 5.20 மணியளவில் அவர் உயிரிழந்ததாகவும், மாரடைப்பு காரணமாக மரணம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவரது மறைவை மகன் மல்ஹர் படேகர் உள்ளூர் ஊடகங்களிடம் உறுதி செய்துள்ளார்.

இந்திய சினிமாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவராகக் கருதப்படும் நானா படேகர், பல்வேறு கதாபாத்திரங்களில் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர்.

தேசிய விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்ற அவர், சினிமாவைத் தாண்டியும் விவசாயிகள், கிராமப்புற மக்கள் மற்றும் சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். குறிப்பாக, நீர் பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளில் செயல்பட்ட அவரது நாம் பவுண்டேஷன் (Naam Foundation) சமூகப் பணிக்காக கவனம் பெற்றது.

நானா படேகரின் மறைவுச் செய்தி வெளியானதும் திரையுலகைச் சேர்ந்த ஏராளமானோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உள்ளிட்டோர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததுடன், நடிகர்கள் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், அனுபம் கெர், மனோஜ் பாஜ்பாய், ரன்தீப் ஹூடா, சுனில் ஷெட்டி, ரவீனா டாண்டன் உள்ளிட்டோரும் தங்களது நினைவுகளைப் பகிர்ந்துள்ளனர். மகாராஷ்டிரா அரசு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்த முடிவு செய்துள்ளது.

இதையும் படிங்க :பாலிவுட் நடிகை கியாரா அத்வானி கர்ப்பம்.. ரசிகர்கள் வாழ்த்து!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com