R. Gautham: தமிழ் திரைப்பட இயக்குநர் ஆர். கவுதம், தனது முதல் இயக்குநர் படமான ‘சிக்கலான குடும்பத்தின் உறுப்பினர்கள்’ திரைப்படத்துக்காக 2026-ம் ஆண்டுக்கான ஆசிய பசிபிக் ஸ்கீரின் அவார்ட்ஸ் விழாவில் சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருதை வென்றுள்ளார்.
R. Gautham: தமிழ் திரைப்பட இயக்குநர் ஆர். கவுதம், தனது முதல் இயக்குநர் படமான ‘சிக்கலான குடும்பத்தின் உறுப்பினர்கள்’ திரைப்படத்துக்காக 2026-ம் ஆண்டுக்கான ஆசிய பசிபிக் ஸ்கீரின் அவார்ட்ஸ் விழாவில் சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருதை வென்றுள்ளார்.

Published on: October 8, 2026 at 1:00 pm
சென்னை, அக்.8, 2026: தமிழ் திரைப்பட இயக்குநர் ஆர். கவுதம், தனது முதல் இயக்குநர் படமான ‘சிக்கலான குடும்பத்தின் உறுப்பினர்கள்’ திரைப்படத்துக்காக 2026-ம் ஆண்டுக்கான ஆசிய பசிபிக் ஸ்கீரின் அவார்ட்ஸ் விழாவில் சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருதை வென்றுள்ளார்.
குடும்ப உறவுகளுக்குள் நிலவும் வன்முறை, மரணம் ஏற்படுத்தும் உளவியல் தாக்கம் மற்றும் துக்கம், வெறுமை, ஆறுதல் ஆகிய உணர்வுகளுக்கு இடையிலான மாற்றங்களை திரைப்படம் பதிவு செய்கிறது. அறிமுகப் படமாக இருந்தபோதிலும், சர்வதேச திரைப்பட விழாக்களில் கிடைத்த வரவேற்பு கவுதமின் இயக்குநர் திறமைக்கு முக்கிய அங்கீகாரமாக அமைந்துள்ளது.
‘சிக்கலான குடும்பத்தின் உறுப்பினர்கள்’ திரைப்படத்தின் கதை, இளம் வயது ஒருவரின் மரணத்தையும் அதைத் தொடர்ந்து நடைபெறும் இறுதிச்சடங்கையும் மையமாகக் கொண்டுள்ளது. அந்த மரணம் குடும்பத்தில் ஏற்படுத்தும் மாற்றங்கள், குடும்ப உறுப்பினர்களுக்கு இடையிலான உறவுச் சிக்கல்கள் மற்றும் வன்முறையின் தாக்கம் ஆகியவை யதார்த்தமான முறையில் சித்தரிக்கப்பட்டுள்ளன.
இந்தப் படத்தின் சர்வதேச பயணம் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டதன் மூலம் தொடங்கியது. இதன் மூலம் பெர்லின் விழாவில் திரையிடப்பட்ட நான்காவது தமிழ் திரைப்படம் என்ற பெருமையையும் இப்படம் பெற்றது; மேலும், பெர்லின் தேர்வுக் குழு இதனை சிறப்பான அறிமுகப் படமாக பாராட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெர்லின் திரையிடலுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் இந்திய பிலிம் விழாவில் தொடக்கப் படமாகவும் இப்படம் திரையிடப்பட்டது. அங்கு சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த இயக்குநர் பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது. வடசென்னையைச் சேர்ந்த கவுதம், சென்னை நகரத்தை அதன் வழக்கமான அழகியல் பார்வையைத் தாண்டி யதார்த்தமான கோணத்தில் பதிவு செய்ய விரும்பியதாக முன்பு தெரிவித்துள்ளார்.
தற்போது ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் முக்கியமான திரைப்பட விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் ஆசிய பசிபிக் ஸ்கீரின் அவார்ட்ஸ்-இல் கிடைத்துள்ள இந்த அங்கீகாரம், தமிழ் சினிமாவின் புதிய தலைமுறை இயக்குநர்களுக்கு சர்வதேச அளவில் கிடைத்து வரும் கவனத்தை மேலும் எடுத்துக்காட்டுகிறது.
இதையும் படிங்க : ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வேன்.. சிவ கார்த்திகேயன்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com