400 ஆண்டுகள் பழைமையான கோவிலில் ரீல்ஸ்.. சர்ச்சையில் சிக்கிய த.வெ.க பெண் நிர்வாகி!

TVK Temple Reels Controversy: 400 ஆண்டுகள் பழமையான மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்குள் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர் ரீல்ஸ் எடுத்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.

Published on: October 8, 2026 at 11:14 am

தூத்துக்குடி, அக்.8, 2026: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் உள்ள சுமார் 400 ஆண்டுகள் பழமையான மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்குள் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர் ரீல்ஸ் எடுத்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.

விளாத்திகுளத்தைச் சேர்ந்த அழகு நிலையம் நடத்தி வரும் தேவி என்பவர், தனது பிறந்தநாளையொட்டி அக்டோபர் 1-ம் தேதி கோயிலுக்குச் சென்றபோது, தேங்காய் மற்றும் பழங்கள் அடங்கிய கூடையை எடுத்துக்கொண்டு கோயிலின் பல்வேறு சன்னதிகளுக்குச் சென்று வீடியோ காட்சிகளைப் பதிவு செய்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர் அந்தக் காட்சிகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட நிலையில், அவை அப்பகுதியில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தின.

கோயில் வளாகத்திற்குள் பக்தர்கள் செல்போன் மற்றும் கேமராக்களைப் பயன்படுத்தி புகைப்படம் அல்லது வீடியோ எடுப்பதற்கு ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக கோயில் நிர்வாகம் சார்பிலும் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விதிமுறையை மீறி ரீல்ஸ் எடுத்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து ஆன்மிக அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கோயில் நிர்வாகத்தின் அனுமதியின்றி இதுபோன்ற காணொளிகளைப் பதிவு செய்வது கோயிலின் புனிதத்தன்மை மற்றும் பக்தர்களின் வழிபாட்டு சூழலை பாதிக்கக்கூடும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலின் செயல் அலுவலர் உமா மகேஸ்வரி, அக்டோபர் 6-ம் தேதி விளாத்திகுளம் காவல் நிலையத்தில் தேவி மீது புகார் அளித்து, உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளார். இதனால் ரீல்ஸ் எடுத்ததாகக் கூறப்படும் சம்பவம் தற்போது காவல்துறை கவனத்திற்கும் சென்றுள்ளது. ஏற்கெனவே இந்து சமய அறநிலையத் துறை கோயில்களுக்குள் ரீல்ஸ் மற்றும் வீடியோ பதிவு செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் எஸ். ரமேஷ் எச்சரித்திருந்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

குறிப்பாக, கோயில்களின் புனிதத்தன்மையைப் பாதுகாப்பது, பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாமல் வழிபாட்டுச் சூழலைப் பேணுவது ஆகியவற்றை கருத்தில் கொண்டு செல்போன் பயன்பாட்டில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. செப்டம்பர் 1 முதல் தமிழகத்தின் 52 முக்கிய கோயில்களில் கேமரா வசதியுள்ள செல்போன்களை எடுத்துச் செல்வதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக அறநிலையத் துறை தெரிவித்திருந்தது; புகைப்படம், வீடியோ, செல்ஃபி மற்றும் ரீல்ஸ் எடுப்பதைத் தடுப்பதே இதன் நோக்கம் என அமைச்சர் விளக்கம் அளித்திருந்தார். இந்தப் பின்னணியில், தமிழக வெற்றிக் கழக (TVK) நிர்வாகி கோயிலுக்குள் ரீல்ஸ் எடுத்ததாக எழுந்துள்ள புகார், கோயில் விதிமுறைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்த விவாதத்தையும் மீண்டும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : மாதவரம் பால் பண்ணையில் முதலமைச்சர் விஜய்.. ரூ.2.23 கோடி புதிய கட்டடம் திறப்பு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com