Madhavan: ‘மொத ராத்திரி’ திரைப்படத்தை பார்த்த நடிகர் மாதவன், படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார்.
Madhavan: ‘மொத ராத்திரி’ திரைப்படத்தை பார்த்த நடிகர் மாதவன், படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார்.

Published on: October 7, 2026 at 3:23 pm
சென்னை, அக்.7, 2026: ‘மொத ராத்திரி’ திரைப்படத்தை பார்த்த நடிகர் மாதவன், படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார். இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தை “அற்புதமான படம்” என குறிப்பிட்ட மாதவன், நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு தமிழ் படத்தை மிகவும் ரசித்ததாக தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார். திரைக்கதை, காட்சிப்படுத்தல் மற்றும் நடிகர்களின் நடிப்பு சிறப்பாக இருந்ததாகவும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கிராமத்து பின்னணியில் நடைபெறும் ஒரு திருமணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’, ஒரே இரவில் நடக்கும் பல்வேறு குழப்பங்கள், எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் நகைச்சுவையான சம்பவங்களை கதையாகக் கொண்டுள்ளது. ஆகஸ்ட் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றதுடன், தற்போது ஓடிடி தளத்திலும் வெளியாகியுள்ளது. இப்படத்தின் மூலம் ரிஷிகாந்த் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்; அனிஷ்மா அனில்குமார் கதாநாயகியாக நடித்துள்ளார்.
மாதவன் தனது பதிவில், நீண்ட நாட்களுக்குப் பிறகு படத்தைப் பார்த்து சிரித்ததாகவும், பல காட்சிகளில் கைதட்டி ரசித்ததாகவும் குறிப்பிட்டு, படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். முன்னதாக நடிகர் தனுஷும் ‘மொத ராத்திரி’ படக்குழுவினரை பாராட்டியிருந்தார். குறிப்பாக, புதியவர்களின் முயற்சியாக உருவாகியுள்ள இப்படத்தை குடும்பத்துடன் திரையரங்கில் பார்க்குமாறு தனுஷ் தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க : கமல்ஹாசன்- விஜய் சேதுபதி காம்போ? அட்லீ விருப்பம் இதுதான்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com