கமல்ஹாசன்- விஜய் சேதுபதி காம்போ? அட்லீ விருப்பம் இதுதான்!

Atlee: இயக்குநர் அட்லி, நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த காலத்தில் தொடங்கப்பட்டு பின்னர் நிறுத்தப்பட்ட ‘மருதநாயகம்’ திரைப்படத்தை மீண்டும் உருவாக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

Published on: October 7, 2026 at 2:29 pm

சென்னை, அக்.7, 2026: இயக்குநர் அட்லி, நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த காலத்தில் தொடங்கப்பட்டு பின்னர் நிறுத்தப்பட்ட ‘மருதநாயகம்’ திரைப்படத்தை மீண்டும் உருவாக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். ‘பத்தா’ திரைப்படத்தின் வெற்றி விழாவில் பேசிய அவர், கமல்ஹாசன் மற்றும் விஜய் சேதுபதியை இணைத்து ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என்பது தனது நீண்டநாள் ஆசை என்றும், அதற்கான வாய்ப்பு மற்றும் மிகப்பெரிய பட்ஜெட் கிடைத்தால் ‘மருதநாயகம்’ படத்தை மீண்டும் உருவாக்க விரும்புவதாகவும் கூறினார்.

‘மருதநாயகம்’ திரைப்படத்திற்காக சில புதிய யோசனைகள் தன்னிடம் இருப்பதாகக் கூறிய அட்லி, கதையில் சிறிய மாற்றங்கள் மற்றும் புதிய அம்சங்களை இணைக்க விரும்புவதாக தெரிவித்தார். குறிப்பாக, விஜய் சேதுபதி படத்தில் நடித்தால் அவர் எந்த வகையான கதாபாத்திரத்தில் தோன்றுவார் என்பதை ரசிகர்களால் முன்கூட்டியே கணிக்க முடியாது என்றும், கதையே படத்தின் முக்கிய நாயகனாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கமல்ஹாசன் எழுதி, இயக்கி, நடிக்கத் தொடங்கிய ‘மருதநாயகம்’ திரைப்படம் 1997-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மிகப்பெரிய பொருட்செலவு உள்ளிட்ட காரணங்களால் படத்தின் தயாரிப்பு பின்னர் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், கமல்ஹாசன்–விஜய் சேதுபதி நடிப்பில், அட்லி இயக்கத்தில் ‘மருதநாயகம்’ மீண்டும் உருவாகும் என்ற எதிர்பார்ப்பை அட்லியின் தற்போதைய கருத்து ஏற்படுத்தியுள்ளது. எனினும், இதுவரை இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ தயாரிப்பு அறிவிப்பு வெளியாகவில்லை.

இதையும் படிங்க : 102 வயதில் மரணம்.. யார் இந்த ஹாலிவுட் நடிகை ஈவா மேரி செயின்ட்?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com