BNS முழுமையான அமல்.. 3 ஆண்டுக்குள் வழக்கு முடிக்கப்படும்.. அமித் ஷா

Amit Shah: “புதிய சட்டங்கள் முழுமையாக நடைமுறைக்கு வந்த பின்னர், ஒரு வழக்கில் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்வது முதல் உச்சநீதிமன்றத்தில் வழக்கு முடிவடைவது வரை 3 ஆண்டுகளுக்குள் நடவடிக்கைகள் நிறைவடையக்கூடும்” என உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

Published on: October 4, 2026 at 6:01 pm

புதுடெல்லி, அக்.4, 2026: மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா, மத்தியப் பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் ஆகியோர் போபாலில் நடைபெற்ற மாநில அளவிலான ‘கோ பாலக் சம்மேளனம்’ நிகழ்ச்சியில் பங்கேற்றனர். போபால் பிஹெச்இஎல் தசரா மைதானத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடை வளர்ப்போர் மற்றும் பால் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தி மூலம் கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து நிகழ்ச்சியில் கவனம் செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, கால்நடை வளர்ப்பை அடிப்படையாகக் கொண்டு முழுமையான பொருளாதாரச் சூழலை உருவாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். மாட்டுச் சாணத்தை உயிரி எரிவாயு மற்றும் இயற்கை உரமாக மாற்றுவது முதல் பால் பொருட்களை பதப்படுத்தி சந்தைப்படுத்துவது வரை பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார். பால் உற்பத்தியாளர்களுக்கு சிறந்த விலை கிடைப்பதற்கும், கிராமங்களில் பால் கூட்டுறவு அமைப்புகளை வலுப்படுத்துவதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

இதனிடையே, உஜ்ஜைனில் நாளொன்றுக்கு 3 லட்சம் லிட்டர் பாலை பதப்படுத்தும் திறன் கொண்ட ரூ.255 கோடி மதிப்பிலான பால் பதப்படுத்தும் ஆலையின் அடிக்கல் நாட்டப்பட்டது. போபாலில் ரூ.16.5 கோடி மதிப்பில் நாளொன்றுக்கு 40 ஆயிரம் லிட்டர் திறன் கொண்ட பால் பொருட்கள் தயாரிப்பு ஆலை மற்றும் ரூ.12.42 கோடி மதிப்பிலான மாநில அளவிலான மத்திய ஆய்வகமும் தொடங்கப்பட உள்ளன. போபால் மற்றும் இந்தூர் பால் ஒன்றிய உறுப்பினர்களுக்கு போனஸ், கால்நடை கொட்டகைகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டதுடன், கால்நடை வளர்ப்பில் சிறப்பாக செயல்படும் பெண்களும் கவுரவிக்கப்பட்டனர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறுகையில், பாரதிய நியாய சன்ஹிதா (BNS) உள்ளிட்ட புதிய குற்றவியல் சட்டங்கள் முழுமையாக அமல்படுத்தப்பட்ட பிறகு, இந்தியாவின் குற்றவியல் நீதி அமைப்பு உலகின் நவீனமான அமைப்புகளில் ஒன்றாக மாறும் என்றார். மேலும், புதிய சட்டங்கள் முழுமையாக நடைமுறைக்கு வந்த பின்னர், ஒரு வழக்கில் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்வது முதல் உச்சநீதிமன்றத்தில் வழக்கு முடிவடைவது வரை 3 ஆண்டுகளுக்குள் நடவடிக்கைகள் நிறைவடையக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க : டெல்லி ஜந்தர் மந்தரில் திடீர் பரபரப்பு.. இடதுசாரி ஆதரவாளர்கள் 150 பேர் கைது!

கர்நாடகாவில் இஸ்லாமிய வாக்காளர்கள் பெயர் நீக்க முயற்சி.. பா.ஜ.க. நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு!
Karnataka SIR Voter List Row

கர்நாடகாவில் இஸ்லாமிய வாக்காளர்கள் பெயர் நீக்க முயற்சி.. பா.ஜ.க. நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com