கேப்டன் ஸ்மித் மச்சாரை நலம் விசாரித்த துபாய் பட்டத்து இளவரசர்.. துணிச்சலுக்கு பாராட்டு!

Dubai Crown Prince Meets Pilot: துபாய் பட்டத்து இளவரசரும், ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைப் பிரதமர் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம், இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாரை மருத்துவமனையில் நேரில் சந்தித்தார்.

Published on: October 4, 2026 at 5:51 pm

துபாய், அக்.4, 2026: துபாய் பட்டத்து இளவரசரும், ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைப் பிரதமர் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம், இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாரை மருத்துவமனையில் நேரில் சந்தித்தார். ஃப்ளைதுபாய் விமானம் FZ1073-ல் துணை விமானி தாக்குதல் நடத்தியபோது, படுகாயமடைந்த நிலையிலும் பயணிகளின் உயிரைக் காப்பாற்ற முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்ட ஸ்மித் மச்சாரின் துணிச்சலை அவர் பாராட்டினார்.

துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நோக்கிச் சென்ற அந்த விமானத்தில் 174 பேர் பயணம் செய்தனர். விமானத்தின் காக்பிட்டில் துணை விமானியால் தாக்கப்பட்டு காயமடைந்த கேப்டன் ஸ்மித் மச்சார், விமானம் வேகமாக கீழிறங்கிய நிலையில் காக்பிட் கதவைத் திறந்தார். இதையடுத்து பயணிகள் மற்றும் விமானக் குழுவினர் உள்ளே சென்று தாக்குதல் நடத்திய துணை விமானியை கட்டுப்படுத்தினர். பின்னர் விமானம் சவுதி அரேபியாவின் தபூக்கில் பாதுகாப்பாக அவசரமாக தரையிறக்கப்பட்டது.

ஸ்மித் மச்சாரை சந்தித்த பின்னர் வெளியிட்ட பதிவில், அவர் வெளிப்படுத்திய துணிச்சல், பொறுப்புணர்வு மற்றும் மனித உயிர்களின் மீதான அக்கறையை ஷேக் ஹம்தான் பாராட்டினார். மேலும், ஸ்மித் மச்சார் ஐக்கிய அரபு அமீரகத்தின் குழுவில் இடம்பெற்றிருப்பதில் பெருமை கொள்வதாகவும், அவர் நாட்டின் கருணை, அமைதி மற்றும் மனித உயிர்களுக்கு மதிப்பளிக்கும் கொள்கைகளை பிரதிபலிப்பதாகவும் குறிப்பிட்டார். தற்போது அபுதாபியில் மருத்துவ சிகிச்சை பெற்று வரும் ஸ்மித் மச்சார் தொடர்ந்து குணமடைந்து வருகிறார்.

இதையும் படிங்க : நேபாள வெள்ளம், நிலச்சரிவு.. உலக நாடுகள் கவனம் நேபாளம் பக்கம் திரும்புமா?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com