Sidhartha Mishra: ஐசிஐசிஐ புருடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக சிதாரதா மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
Sidhartha Mishra: ஐசிஐசிஐ புருடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக சிதாரதா மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

Published on: October 3, 2026 at 2:43 pm
புதுடெல்லி, அக்.3, 2026: ஐசிஐசிஐ புருடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக சிதாரதா மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். அக்டோபர் 14-ம் தேதி முதல் அவர் இந்தப் பொறுப்பை ஏற்க உள்ளார். முன்னதாக, தற்போதைய எம்.டி. மற்றும் சி.இ.ஓ. அனுப் பாக்சி அக்டோபர் 13-ம் தேதி பதவி விலகுகிறார். இதையடுத்து, சிதாரதா மிஸ்ரா புதிய பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐசிஐசிஐ வங்கியில் 26 ஆண்டுகளுக்கும் மேலாக வங்கித் துறையில் அனுபவம் பெற்றுள்ள சிதாரதா மிஸ்ரா, தற்போது டிஜிட்டல் சேனல்கள் மற்றும் பார்ட்னர்ஷிப்ஸ், வாடிக்கையாளர் சேவை, குரல் சேனல், என்.ஆர்.ஐ. மற்றும் சர்வதேச நிதி நிறுவனக் குழுக்கள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு தலைமை வகித்து வருகிறார். ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள உத்கல் பல்கலைக்கழகத்தில் அறிவியல் பட்டமும், நிதித்துறையில் சிறப்புப் பிரிவுடன் மேலாண்மையில் முதுநிலை டிப்ளமோவும் பெற்றுள்ளார்.
சிதாரதா மிஸ்ரா அக்டோபர் 6-ம் தேதி ஐசிஐசிஐ புருடென்ஷியல் லைஃப் நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரியாக முதலில் பொறுப்பேற்கிறார். பின்னர், அக்டோபர் 14-ம் தேதி அல்லது இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (IRDAI) ஒப்புதல் கிடைக்கும் தேதியில், கூடுதல் இயக்குநர் மற்றும் எம்.டி., சி.இ.ஓ.வாக பொறுப்பேற்பார். இந்த நியமனம் 5 ஆண்டுகளுக்கு, தேவையான ஒழுங்குமுறை ஒப்புதல்களுக்கு உட்பட்டு அமல்படுத்தப்பட உள்ளது. இதனிடையே, அனுப் பாக்சி அக்டோபர் 27-ம் தேதி முதல் ஹெச்.டி.எஃப்.சி. வங்கியின் எம்.டி., சி.இ.ஓ.வாக பொறுப்பேற்க உள்ளார்.
இதையும் படிங்க : ஆந்திராவில் ரூ.1 லட்சம் கோடி முதலீடு.. நான் உங்கள் மகன்.. ரிலையன்ஸ் ஆனந்த் உருக்கம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com