பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் ராவல் பிண்டி எக்ஸ்பிரஸ்? பரபரப்பு தகவல்கள்

Shoaib Akhtar: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் ராவல் பிண்டி எக்ஸ்பிரஸ் சோயப் அக்தர் வரக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

Published on: September 30, 2026 at 2:17 pm

புதுடெல்லி, செப்.30, 2026: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (PCB) செயல்பாடுகளை கடந்த காலங்களில் வெளிப்படையாக விமர்சித்து வந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர், தற்போது அந்த அமைப்பில் முக்கிய பொறுப்புக்கு வரக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் பாகிஸ்தான் அணியின் மோசமான செயல்பாட்டைத் தொடர்ந்து, PCB-யின் கிரிக்கெட் கட்டமைப்பில் மாற்றங்களை மேற்கொள்ள அதன் தலைவர் மொஹ்சின் நக்வி பரிசீலித்து வருவதாகவும், இதன் ஒரு பகுதியாக சோயிப் அக்தருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இருப்பினும், சோயிப் அக்தருக்கு வழங்கப்பட உள்ள பொறுப்பு என்ன என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இஸ்லாமாபாத்தில் வசித்து வரும் சோயிப் அக்தர், கடந்த வாரம் மொஹ்சின் நக்வியை சந்தித்து பாகிஸ்தான் கிரிக்கெட்டின் எதிர்காலம், தேசிய அணிகளின் செயல்பாடு மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் அடுத்தகட்ட திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில மாதங்களில் இருவருக்கும் இடையிலான உறவில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சோயிப் அக்தரின் மூத்த சகோதரர் உயிரிழந்தபோது மொஹ்சின் நக்வி அவரை நேரில் தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்ததாக பாகிஸ்தான் கிரிக்கெட் ஃபோர்டு வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்ததாக பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அந்த நேரத்தில் நக்வி காட்டிய அக்கறை சோயிப் அக்தரை பெரிதும் கவர்ந்ததாகவும், இதன் பின்னர் இருவருக்கும் இடையிலான தொடர்பு அதிகரித்ததாகவும் அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, தேசிய கிரிக்கெட் அகாடமி மற்றும் பாகிஸ்தான் அணிகளின் பயிற்சி முகாம்களுக்கு வந்து பார்வையிடுமாறு சோயிப் அக்தருக்கு நக்வி அழைப்பு விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்தப் பேச்சுவார்த்தைகள் வெறும் ஆலோசனை அல்லது மரியாதை ரீதியான சந்திப்பாக மட்டும் இல்லாமல், பாகிஸ்தான் கிரிக்கெட்டை மறுசீரமைப்பது தொடர்பான விரிவான ஆலோசனையாக அமைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் கிரிக்கெட்டை எவ்வாறு மீண்டும் கட்டமைக்க வேண்டும் என்பது குறித்து சோயிப் அக்தர் தனது கருத்துகள் மற்றும் திட்டங்களை நக்வியிடம் முன்வைத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், முக்கிய பொறுப்பை ஏற்கும் பட்சத்தில் அதற்கான சில நிபந்தனைகள் மற்றும் எதிர்பார்ப்புகளையும் அவர் தெரிவித்ததாகத் தெரிகிறது.

சோயிப் அக்தர் இதுவரை தேர்வு முடிவுகள், நிர்வாக நடவடிக்கைகள் மற்றும் தேசிய அணியின் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கத்தை வெளிப்படையாக விமர்சித்து வந்துள்ளார். இந்நிலையில், அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கத்தில் முக்கிய பொறுப்புக்கு வருவது தொடர்பான தகவல் பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. எனினும், அவருக்கு எந்தப் பதவி வழங்கப்படும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை, இந்த தகவலை அறிக்கையாக மட்டுமே கருத வேண்டும்.

இதையும் படிங்க : 42 ஆண்டு கால சாதனை தகர்ப்பு.. வித்யா விஸ்வரூபம்.. பி.டி உஷா என்ன சொன்னார் தெரியுமா?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com