இதய பிரச்னை ஏற்பட போதிய தூக்கமின்மை காரணமா? மருத்துவர் விளக்கம்!

Heart problem: போதுமான தூக்கம் இல்லாதபோது, இந்த சீரமைப்பு மற்றும் மீட்பு செயல்பாடுகள் முழுமையாக நடைபெறாமல் போகலாம் என டாக்டர் மிருதுல் சர்மா தெரிவித்துள்ளார்.

Published on: September 27, 2026 at 1:10 pm

சென்னை, செப்.27, 2026: போதுமான தூக்கம் கிடைக்காமல் இருப்பது மறுநாள் சோர்வை மட்டும் ஏற்படுத்துவதில்லை; தொடர்ந்து தூக்கத்தை குறைத்துக் கொள்வது இதய ஆரோக்கியத்தையும் பாதிக்கக்கூடும் என இதய நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். நீண்ட நாள் வேலை முடிந்த பிறகு தனிப்பட்ட நேரத்தை செலவிடுவது, நிலுவையில் உள்ள பணிகளை முடிப்பது போன்ற காரணங்களால் தூக்க நேரத்தை குறைப்பது சிலருக்கு வழக்கமாகிவிடுகிறது. ஆனால், தூக்கமின்மை தொடர்ந்து நீடித்தால் உடலின் முக்கியமான சீரமைப்பு மற்றும் மீட்பு செயல்முறைகள் பாதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து ராஜ்கோட்டில் உள்ள ஸ்டெர்லிங் மருத்துவமனையின் இன்டர்வென்ஷனல் கார்டியாலஜிஸ்ட் டாக்டர் மிருதுல் சர்மா கூறுகையில், தூக்கம் என்பது உடல் ஓய்வெடுக்கும் நேரம் மட்டுமல்ல; உடல் தன்னை சீரமைத்து மீட்டெடுக்கும் முக்கியமான காலகட்டம் என்றும் தெரிவித்துள்ளார். தூக்கத்தின்போது இதயம், ரத்த நாளங்கள் மற்றும் உடலின் வளர்சிதை மாற்றம் உள்ளிட்ட முக்கிய செயல்பாடுகளுக்கான சீரமைப்பு பணிகள் நடைபெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து போதுமான தூக்கம் இல்லாதபோது, இந்த சீரமைப்பு மற்றும் மீட்பு செயல்பாடுகள் முழுமையாக நடைபெறாமல் போகலாம் என டாக்டர் மிருதுல் சர்மா தெரிவித்துள்ளார். இதன் காரணமாக இதயம் மற்றும் ரத்த நாளங்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படலாம் என்றும், தூக்கக் குறைபாடு ரத்த அழுத்தம் உள்ளிட்ட உடல்நலக் காரணிகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்றும் அவர் விளக்கியுள்ளார். எனவே, தினசரி தூக்க நேரத்தை அலட்சியப்படுத்தாமல், உடலுக்கு தேவையான ஓய்வை வழங்குவது முக்கியம் என அறிவுறுத்தப்படுகிறது.

சிறந்த தூக்கத்திற்காக தினமும் ஒரே நேரத்தில் படுக்கைக்குச் சென்று எழும் பழக்கத்தை கடைப்பிடிப்பது, படுக்கைக்கு முன் செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களின் பயன்பாட்டை குறைப்பது, இரவு நேரத்தில் அதிக உணவு மற்றும் கஃபீன் உட்கொள்வதை தவிர்ப்பது, அமைதியான மற்றும் இருண்ட தூக்க சூழலை உருவாக்குவது, பகலில் உடற்பயிற்சி செய்வது போன்ற பழக்கங்கள் உதவக்கூடும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தூக்கத்தில் தொடர்ந்து பிரச்சினை இருப்பவர்கள் அல்லது குறட்டை, மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் இருந்தால், மருத்துவரை அணுகி உரிய ஆலோசனை பெறுவது அவசியம்.

இதையும் படிங்க : இதய ஆரோக்கியத்துக்கு சவாலாகும் பொதுக்கூட்டங்கள், திருவிழாக்கள்.. மருத்துவர்கள் எச்சரிக்கை!

இதய ஆரோக்கியத்துக்கு சவாலாகும் பொதுக்கூட்டங்கள், திருவிழாக்கள்.. மருத்துவர்கள் எச்சரிக்கை!
Heart Health

இதய ஆரோக்கியத்துக்கு சவாலாகும் பொதுக்கூட்டங்கள், திருவிழாக்கள்.. மருத்துவர்கள் எச்சரிக்கை!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com