இந்தியாவில் வேலையில்லா விகிதம் குறைவு.. காரணம் கிராமங்களா?

Unemployment rate in India: இந்தியாவின் வேலைவாய்ப்பு தரவுகள் படி, ஆகஸ்ட் 2026-இல் வேலைஇல்லா விகிதம் 5% ஆக குறைந்துள்ளது. குறிப்பாக, கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பு அதிகரித்ததால், வேலைஇல்லா விகிதம் 7 மாதங்களில் மிகக் குறைந்த நிலையை எட்டியுள்ளது.

Published on: September 16, 2026 at 12:06 pm

புதுடெல்லி செப்டம்பர் 16, 2026; இந்தியாவின் வேலைவாய்ப்பு தரவுகள் படி, ஆகஸ்ட் 2026-இல் வேலைஇல்லா விகிதம் 5% ஆக குறைந்துள்ளது. குறிப்பாக, கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பு அதிகரித்ததால், வேலைஇல்லா விகிதம் கடந்த 7 மாதங்களில் மிகக் குறைந்த நிலையை எட்டியுள்ளது. ஜூலை மாதத்தில் 5.1% இருந்த வேலைஇல்லா விகிதம், ஆகஸ்டில் 5% ஆக குறைந்தது.

கிராமப்புறங்களில் வேலைஇல்லா விகிதம் 4.5% இருந்து 4.1% ஆக குறைந்துள்ளது. இது ஜனவரி மாதத்திற்குப் பிறகு மிகக் குறைந்த நிலையாகும். நகர்ப்புறங்களில் வேலைஇல்லா விகிதம் 6.7% இருந்து 6.8% ஆக சிறிய மாற்றம் மட்டுமே கண்டுள்ளது. இதனால், கிராமப்புற வேலைவாய்ப்பு வளர்ச்சி நாட்டின் மொத்த வேலைவாய்ப்பு நிலையை மேம்படுத்தியதாக கருதப்படுகிறது.

வேலைவாய்ப்பு பங்கேற்பு விகிதம் (LFPR) ஜூலை மாதத்தில் 55.4% இருந்த நிலையில், ஆகஸ்டில் 55.6% ஆக உயர்ந்துள்ளது. கிராமப்புறங்களில் LFPR 58% இருந்து 58.2% ஆக உயர்ந்துள்ளது. நகர்ப்புறங்களில் 50.4% என்ற நிலை மாற்றமின்றி தொடர்கிறது. கடந்த ஆண்டு ஆகஸ்டில் 55% இருந்த LFPR, இவ்வாண்டு 55.6% ஆக உயர்ந்துள்ளது.

பெண்கள் பங்கேற்பு விகிதமும் உயர்ந்துள்ளது. மொத்த பெண்கள் LFPR ஜூலை மாதத்தில் 34.4% இருந்த நிலையில், ஆகஸ்டில் 34.8% ஆக உயர்ந்துள்ளது. கிராமப்புற பெண்கள் LFPR 38.8% இருந்து 39.4% ஆக உயர்ந்துள்ளது. நகர்ப்புற பெண்கள் LFPR 25.3% இருந்து 25.4% ஆக சிறிய முன்னேற்றம் கண்டுள்ளது. கடந்த ஆண்டு 33.7% இருந்த பெண்கள் பங்கேற்பு, இவ்வாண்டு 34.8% ஆக உயர்ந்துள்ளது.

மொத்த வேலைவாய்ப்பு பங்கேற்பு விகிதம் (WPR) ஜூலை மாதத்தில் 52.5% இருந்த நிலையில், ஆகஸ்டில் 52.8% ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த 5 மாதங்களில் மிக உயர்ந்த நிலையாகும். கிராமப்புற WPR 55.4% இருந்து 55.8% ஆக உயர்ந்துள்ளது. நகர்ப்புற WPR 47% என்ற நிலை மாற்றமின்றி தொடர்கிறது. இந்த முன்னேற்றம், வேளாண்மை மற்றும் கிராமப்புற தொழில்கள் வளர்ச்சியால் ஏற்பட்டதாகவும், பெண்கள் பங்கேற்பு அதிகரித்திருப்பது கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டங்கள் மற்றும் சுயதொழில் வாய்ப்புகள் காரணமாகும் என்றும் கருதப்படுகிறது.

இதையும் படிங்க; 24 காரட் தங்க முலாம் பூசப்பட்ட விநாயகர்.. ஹைதராபாத் மார்க்கெட்டில் பரபரப்பு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com