நேபாள கோர வெள்ளம், நிலச்சரிவு: 600-க்கும் மேற்பட்டோர் சுரங்கங்களில் சிக்கி தவிப்பு! மீட்புப் பணிகள் தீவிரம்

Nepal Floods: நேபாளத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் திரிசூலி-3A நீர்மின் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சுரங்கங்கள் மண்ணில் புதைந்துள்ளன. இதில் 600-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.

Published on: September 1, 2026 at 2:33 pm

காத்மாண்டு, செப்.1, 2026: நேபாளத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பல்வேறு பகுதிகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக திரிசூலி-3A நீர்மின் நிலையத்தில் மண்ணால் நிரம்பிய சுரங்கங்களில் 600-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. அவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் வெடிபொருட்கள், கனரக இயந்திரங்கள் மற்றும் காற்று செலுத்தும் கருவிகளை பயன்படுத்தி சுரங்கங்களைத் திறக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

நேபாள பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தகவலின்படி, இதுவரை 939 பேர் உயிரிழந்துள்ளனர்; 3,925 பேர் காணாமல் போயுள்ளனர். இதில் 592 பேர் வெளிநாட்டினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர்மின் நிலையங்களில் இருந்து இதுவரை 279 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். நேபாள ராணுவத்துடன் சீன ராணுவக் குழுக்களும், இந்தியா, தென்கொரியா மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நிபுணர்களும் மீட்புப் பணிகளுக்கு உதவி வருகின்றனர்.

இதனிடையே, ஆகஸ்ட் 26-ம் தேதி முதல் காணாமல் போன 933 தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சிலர் சுரங்கங்களுக்குள் சிக்கியிருக்கலாம் என அதிகாரிகள் கருதுகின்றனர். சிலிம் மற்றும் லாங்டாங் பகுதிகளில் உள்ள நீர்மின் நிலையங்களிலும் இந்தியாவைச் சேர்ந்த சுரங்க மீட்புக் குழுவினர் பணியாற்றி வருகின்றனர். வெள்ளத்தால் குறைந்தது 11 நீர்மின் திட்டங்கள் சேதமடைந்துள்ளன. இதற்கிடையே, சித்வான் பகுதியில் ஆறுகளில் இருந்து சுமார் 300 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன; அவற்றில் பல அடையாளம் காணப்படாததால் டி.என்.ஏ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

உடல்களை பாதுகாப்பாக வைக்க போதுமான குளிர்சாதன வசதி இல்லாததால், சில உடல்கள் தற்காலிகமாக புதைக்கப்பட்டுள்ளன. உடல்களை அடையாளம் காணும் பணிக்காக இந்தியாவிலிருந்து தடயவியல் நிபுணர்கள் கொண்ட குழு நேபாளம் சென்றுள்ளது. டி.என்.ஏ பரிசோதனை உள்ளிட்ட பணிகளில் அவர்கள் உதவி வருகின்றனர். மேலும், குளிர்சாதனப் பெட்டிகள், டி.என்.ஏ பரிசோதனை உபகரணங்கள், ட்ரோன்கள், பாலங்கள் மற்றும் சுரங்க மீட்பு கருவிகள் உள்ளிட்ட உதவிகளை பல்வேறு நாடுகளிடம் நேபாளம் கோரியுள்ளது. நேபாளம்-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பனிக்கட்டி மற்றும் பாறை சரிவே இந்த பேரழிவுக்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படும் நிலையில், சீனா தனது நீர்மின் திட்டங்களால் இந்த பேரிடர் ஏற்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.

இதையும் படிங்க: நேபாள வெள்ளத்தில் சிக்கி 5,000 பேர் மாயம்.. தமிழக ஓய்வு நீதிபதி நிலை என்ன?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com