கோபர்தன் திட்டம் இன்று முதல் அமல்! ரூ.23,731 கோடி முதலீட்டில் உயிரி எரிவாயு உற்பத்தி.. மத்திய அரசு முக்கிய முன்னெடுப்பு

GOBARdhan Scheme: ரூ.23,731 கோடி மொத்த நிதி ஒதுக்கீட்டில் ‘கோபர்தன்’ மத்தியத் துறை திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்தியாவில் அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு (CBG) உற்பத்தி மற்றும் பயன்பாட்டை அதிகரிப்பதுடன், 2035-36ம் ஆண்டுக்குள் நாட்டின் எதிர்கால எரிசக்தி கலவையில் CBG-ஐ முக்கிய அங்கமாக உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

Published on: September 1, 2026 at 3:06 pm

புதுடெல்லி, செப்.1, 2026: இந்தியாவில் அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு (Compressed Biogas – CBG) உற்பத்தி மற்றும் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில், ரூ.23,731 கோடி மொத்த நிதி ஒதுக்கீட்டுடன் கூடிய கோபர்தன் மத்தியத் துறை திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்தத் திட்டம் 2035-36ம் ஆண்டு வரை செயல்படுத்தப்பட உள்ளது. நாட்டின் எதிர்கால எரிசக்தி தேவையில் CBG-ஐ முக்கியமான அங்கமாக உருவாக்கும் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

இத்திட்டத்தின் மூலம் நாட்டில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் CBG அளவை தற்போதைய நிலையில் இருந்து சுமார் 10 மடங்கு அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உயிரி கழிவுகளை பயனுள்ள எரிசக்தியாக மாற்றுவதுடன், CBG துறையில் பெரிய அளவில் தனியார் முதலீடுகளை ஈர்க்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மேலும், நாடு முழுவதும் சுற்றுச்சுழல் உயிரிப் பொருளாதாரத்தை (Circular Bioeconomy) உருவாக்குவதற்கும் கோபர்தன் திட்டம் முக்கியத்துவம் அளிக்கிறது. விவசாயக் கழிவுகள், கால்நடை கழிவுகள் மற்றும் பிற உயிரியல் கழிவுகளை பயன்படுத்தி CBG உள்ளிட்ட பயனுள்ள எரிசக்தி வளங்களை உருவாக்குவதன் மூலம் கழிவு மேலாண்மை மற்றும் தூய்மையான எரிசக்தி உற்பத்தியை ஒருங்கிணைக்க இத்திட்டம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கோபர்தன் மத்தியத் துறை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை கடந்த மாதம் 6-ம் தேதி ஒப்புதல் அளித்திருந்தது. தற்போது திட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில், CBG உற்பத்தியை விரிவுபடுத்துதல், தனியார் முதலீட்டை அதிகரித்தல் மற்றும் உயிரிக் கழிவுகளை பொருளாதார வளமாக மாற்றுதல் ஆகியவற்றில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளன.

இதையும் படிங்க: அமெரிக்கா- வெனிசுலா எண்ணெய் ஒப்பந்தம்.. உலக நாடுகள் வெனிசுலா கச்சாவை விரும்புவது ஏன்?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com