ஒகேனக்கல்லில் 12,000 கனஅடி.. காவிரியில் திடீர் நீர்வரத்து உயர்வு!

Cauvery Flow: கர்நாடகத்தின் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து தொடர்ந்து நீர் திறக்கப்பட்டு வருவதால், ஒகேனக்கல்லில் காவிரி நீர்வரத்து 12,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் பரிசல் இயக்கத் தடை தொடர்கிறது.

Published on: August 22, 2026 at 12:46 pm

சென்னை, ஆகஸ்ட் 22: கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் (KRS) அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதன் காரணமாக, தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் காவிரி நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை 6 மணியளவில் 10,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து பின்னர் 12,000 கனஅடியாக உயர்ந்தது. பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வள ஆணைய அதிகாரிகள் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

மாண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு 108.95 அடியாக பதிவானது. அணைக்கு 1,551 கனஅடி நீர் வந்த நிலையில், காவிரியில் 2,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. அதேநேரத்தில், மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணையில் இருந்து தமிழகத்துக்காக தொடர்ந்து நீர் திறக்கப்பட்டு வருகிறது.

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி, ஆகஸ்ட் 13 முதல் 22 வரை 9 நாட்களில் கபினி அணையில் இருந்து தமிழகத்துக்காக சுமார் 4.95 டிஎம்சி நீர் திறக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நீர் வெளியேற்றப்பட்டதால், கபினி அணையின் நீர்மட்டம் கடந்த 9 நாட்களில் சுமார் 7 அடி குறைந்து 2,275.56 அடியாக உள்ளது. தற்போது கபினி அணையில் இருந்து 12,940 கனஅடியும், KRS அணையில் இருந்து 2,000 கனஅடியும் திறக்கப்பட்டு, மொத்தம் 14,940 கனஅடி நீர் காவிரியில் செலுத்தப்படுகிறது.

காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கத் தடை தொடர்ந்து அமலில் உள்ளது. நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதால், ஒகேனக்கல் மற்றும் கரையோர பகுதிகளில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க : பிரம்மபுத்திரா, கோதாவரி, காவிரி நதிகள் இணைப்புத் திட்டம்.. அமித் ஷா முன்மொழிவு

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com