பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் விஜய் மெட்ரோ பயணம்! சென்னையில் உச்சக்கட்ட பாதுகாப்பு

PM Modi–Vijay Metro Ride : பூந்தமல்லி – வடபழனி இடையேயான 14.64 கி.மீ. மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைக்க அக்டோபர் 11-ந் தேதி சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடி, பின்னர் முதலமைச்சர் விஜய்யுடன் பூந்தமல்லியில் இருந்து போரூர் வரை மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய உள்ளார். இதையொட்டி சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Published on: October 6, 2026 at 11:50 am

சென்னை, அக். 6. 2026: சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்தின் முதல் செயல்பாட்டு வழித்தடத்தை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வரும் அக்டோபர் 11-ந் தேதி சென்னை வருகிறார். பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான 14.64 கிலோமீட்டர் நீள மெட்ரோ ரயில் பாதையை அவர் தொடங்கி வைக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய்யும் பங்கேற்க உள்ளார்.

பிரதமர் மோடி அக்டோபர் 11-ந் தேதி காலை 10.55 மணியளவில் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பூந்தமல்லி செல்கிறார். காலை 11.30 மணியளவில் பூந்தமல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், பூந்தமல்லி–வடபழனி இடையேயான மெட்ரோ சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

இதைத்தொடர்ந்து, பிரதமர் மோடியும் முதலமைச்சர் விஜய்யும் பூந்தமல்லியில் இருந்து போரூர் வரை மெட்ரோ ரயிலில் இணைந்து பயணம் செய்ய உள்ளனர். முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பிறகு, பிரதமர் மோடியுடன் அவர் பங்கேற்கும் முதல் அரசு நிகழ்ச்சி இதுவாகும் என்பதால் இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்திலும் கவனம் பெற்றுள்ளது.

பிரதமரின் சென்னை வருகையையொட்டி விமான நிலையம், பூந்தமல்லி, போரூர், சென்னை ஐ.ஐ.டி. உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பிரதமர் செல்லும் வழித்தடங்களிலும் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் சாய்குமார் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன், டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால், சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதையும் படிங்க துவரம் பருப்பு கொள்முதலில் ரூ.187.56 கோடி சேமிப்பு.. தமிழ்நாடு அரசு

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com