CM Vijay: ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்த்தப்படும் என்றும் அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் கார் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
CM Vijay: ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்த்தப்படும் என்றும் அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் கார் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

Published on: August 19, 2026 at 2:31 pm
சென்னை, ஆக.19, 2026: சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கார் வழங்கப்படும் என்றும், எரிபொருள் உள்ளிட்ட செலவுகளுக்காக மாதம் ரூ.75,000 வாகனப்படியாக வழங்கப்படும் என்றும் அறிவித்தார். மேலும், உறுப்பினர்கள் தங்களுக்கு ஓர் உதவியாளரை நியமித்து கொள்ளலாம்; அதற்காக மாதம் ரூ.25,000 வழங்கப்படும்.
அதே நேரத்தில், ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்படும் எனவும், 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இது பால் உற்பத்தியாளர்களுக்கு நிவாரணமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலமைச்சர், மக்களுக்கான மருத்துவ காப்பீடு தொகையை ஆண்டுக்கு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்துவதாகவும் அறிவித்தார். இதன் மூலம் பொதுமக்களுக்கு அதிக பாதுகாப்பு கிடைக்கும்.
இந்நிலையில், “ஒரே நாளில் இவ்வளவு இன்ப அதிர்ச்சி கொடுத்தால் எப்படி? மக்களுக்கு மருத்துவ காப்பீடு, ஆவின் பால் விலை உயர்வு, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாகனம் உள்ளிட்ட திட்டங்களை அறிவித்த முதலமைச்சர் விஜய்க்கு மனம் நிறைந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அமைச்சர் ஷாஜகான் பாராட்டினார்.
இதையும் படிங்க : 21 அ.தி.மு.க MLA-க்கள் தகுதி நீக்க விவகாரம்.. சபாநாயகர் முடிவில் என்ன தவறு? ஐகோர்ட்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com