திருவனந்தபுரம் டூ வேளாங்கண்ணி சிறப்பு ரயில்.. முழு விவரம்
Velankanni special train : வருடாந்திரத் திருவிழாவின் போது பக்தர்களின் பெருந்திரளான வருகையைக் கையாளும் வகையில், தெற்கு ரயில்வே மற்றும் தென் மத்திய ரயில்வே ஆகியவை 2026-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் வேளாங்கண்ணிக்கான பல சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளன.
சென்னை, ஆக.19, 2026: திருவனந்தபுரம் வடக்கு – வேளாங்கண்ணி இடையே, தேவாலய திருவிழாவையொட்டி தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குவதாக அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 29 மற்றும் செப்டம்பர் 5ஆம் தேதி இரவு 7.35 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06115), மறுநாள் காலை 8.40 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.
அதேபோல், வேளாங்கண்ணி ரயில் நிலையத்தில் இருந்து ஆகஸ்ட் 30 மற்றும் செப்டம்பர் 6ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06116), மறுநாள் காலை 7.30 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு சென்றடையும். இந்த ரயில்கள், தேவாலய திருவிழாவிற்கு பங்கேற்கும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு பெரும் வசதியாக அமையும்.
சிறப்பு ரயில்கள் குழித்துறை, நாகர்கோவில் டவுன், வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திருச்சி, தஞ்சை போன்ற முக்கிய நிலையங்கள் வழியாக இயக்கப்படுகின்றன. இதனால், தெற்கு மாவட்டங்களிலிருந்து வேளாங்கண்ணி செல்லும் பயணிகள் எளிதில் பயணிக்க முடியும்.
இந்த ரயில்களுக்கான முன்பதிவு ஆகஸ்ட் 20ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும். பக்தர்கள் IRCTC இணையதளம் அல்லது அருகிலுள்ள முன்பதிவு நிலையங்கள் மூலம் டிக்கெட்டுகளைப் பெறலாம்.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு, வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக மேற்கொள்ளப்பட்ட முக்கியமான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.