Yash: டாக்சிக் படத்தில் உள்ள காட்சிகள் அர்த்தமுள்ள கேள்விகள் எழுப்பும் என நடிகர் யஷ் தெரிவித்துள்ளார்.
Yash: டாக்சிக் படத்தில் உள்ள காட்சிகள் அர்த்தமுள்ள கேள்விகள் எழுப்பும் என நடிகர் யஷ் தெரிவித்துள்ளார்.

Published on: August 19, 2026 at 12:39 pm
பெங்களூரு, ஆக.19, 2026: நடிகர் யஷ், தனது புதிய படம் டாக்சிக் குறித்து எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு பதிலளித்துள்ளார். படத்தில் இடம்பெற்ற நெருக்கமான காட்சிகள் மற்றும் பெண்கள் சித்தரிப்பு தொடர்பான விமர்சனங்களுக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.
அதில், “இது சலசலப்புக்காக செய்யப்பட்ட காட்சிகள் அல்ல; அர்த்தமுள்ள கேள்விகள் எழுப்புவதற்காகவே இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது” என்று யஷ் தெரிவித்துள்ளார். மேலும் அவர், இந்த படம் முழுமையாக பெரியவர்களுக்கானது என்பதை வலியுறுத்தியுள்ளார். “சிறுவர்கள் இந்த கேங்ஸ்டர் படத்தில் இருந்து விலகி இருங்கள்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2022 ஆம் ஆண்டின் கே.ஜி.எஃப்: சாப்டர் 2 வெற்றிக்கு பிறகு, யஷ் நடிப்பில் வெளியாகும் முதல் படம் என்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. டாக்சிக் படத்தின் ட்ரெய்லர் மற்றும் முன்னோட்ட காட்சிகள் வெளியானதும், சமூக ஊடகங்களில் பெண்கள் பாலியல் மற்றும் பாலுறவு காட்சிகள் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த யாஷ், “கீது மோகன்தாஸ் பார்வை தெளிவானது; இது கவரச்சி படம் அல்ல, இது அழுத்தமான கேள்விகள் எழுப்பும் படம்” எனத் தெரிவித்துள்ளார்.
டாக்சிக் திரைப்படம் ஆகஸ்ட் 26, 2026 அன்று உலகளாவிய அளவில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் யஷ், கியாரா அத்வானி, நயன்தாரா, ஹூமா குரேஷி, தாரா சுதாரியா, ருக்மிணி வசந்த் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படம், வெளியீட்டுக்கு முன்பே பெரும் சர்ச்சையையும், அதேசமயம் ரசிகர்களிடையே மிகுந்த ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : சுதந்திர தின விழாவில் திரிஷா.. தி.மு.க அதிகாரப்பூர்வ நாளேட்டில் கண்டன தலையங்கம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com