‘ஸ்டாலின் காலை உணவுத் திட்டம்’ என பெயர் வைக்க சொன்னோம்.. சட்டப்பேரவையில் எ.வ வேலு பரபரப்பு பேச்சு

E.V. Velu: காலை உணவுத் திட்டத்தின் பெயரை மாற்றியது ஏன் என தி.மு.க முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு சட்டமன்றத்தில் கேள்வியெழுப்பினார்.

Published on: August 18, 2026 at 3:52 pm

சென்னை, ஆக.18, 2026: தி.மு.க முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு இன்று (செவ்வாய்க்கிழமை) சட்டமன்றத்தில் பேசுகையில், “முதல்வர் காலை உணவுத் திட்டத்தின் பெயரை மாற்றியது ஏன் எனக் கேள்வியெழுப்பினார். தொடர்ந்து, “புதிதாக ஓர் திட்டத்தை உருவாக்கி அதற்கு காமராஜர் பெயரை வைக்க வேண்டியது தானே எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும், ஸ்டாலின் காலை உணவுத் திட்டம் எனப் பெயர் வைக்க சொன்னபோது ஸ்டாலின் அதை மறுத்தார் எனக் கூறிய எ.வ. வேலு, முதல்வர் காலை உணவுத் திட்டம் எனப் பெயர் வைத்தால் யாரும் அந்தத் திட்டத்தை மாற்றமாட்டார்கள் என்றும் நாங்கள் உருவாக்கிய திட்டத்துக்கு நீங்கள் ஏன் பெயரை மாற்ற வேண்டும் என்பதே எங்கள் கேள்வி என்றும் அவர் கூறினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, “ஒரு பழமொழி சொல்வார்கள்; வாழைப் பழத்தில் ஊசியேற்றி அதையை மக்களுக்கு கொடுப்பார்கள்; அப்படிதான் எ.வ. வேலு பேச்சு இருந்தது” என்றார்.

இதையும் படிங்க : தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறப்பை உறுதி செய்க.. உச்ச நீதிமன்றம்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com