தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.. ரூ.560 கோடி அறிவிப்பு

Gold ring scheme: தமிழ்நாடு அரசு, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கான ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Published on: August 5, 2026 at 1:30 pm

சென்னை, ஆக.5, 2026: தமிழ்நாடு அரசு 2026-27 நிதியாண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தில் சுகாதாரத் துறைக்காக ரூ. 23,357 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் மாநிலத்தின் சுகாதார சேவைகள் மேம்படுத்தப்படுவதோடு, மக்கள் நலனுக்கான பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கான ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 560 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் அரசு மருத்துவமனைகளில் பிரசவங்களை ஊக்குவிப்பதோடு, மக்களின் சொந்தச் செலவைக் குறைக்கும் என்று நிதியமைச்சர் குறிப்பிட்டார்.

தற்போது மாநிலத்தில் 53 சதவீதப் பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளிலேயே நடைபெறுகின்றன. புதிய திட்டம் நடைமுறைக்கு வந்தால், அரசு மருத்துவமனைகளில் பிரசவ எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், பொதுமக்கள் சுகாதாரச் செலவில் சுமை குறையும்.

மேலும், தொலைதூர மருத்துவச் சேவைக்காக ரூ. 18.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களும் நவீன மருத்துவ சேவைகளை எளிதில் பெறும் வாய்ப்பு கிடைக்கும்.

இதையும் படிங்க : பின்தங்கிய மாவட்டங்களில் தொழில்பேட்டைகள்.. த.வெ.க பட்ஜெட்டில் அறிவிப்பு

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com