தமிழக அரசியலில் பரபரப்பு.. கைதாகிறாரா செந்தில் பாலாஜி?

Senthil Balaji: முன்னாள் தி.மு.க அமைச்சர் செந்தில் பாலாஜி விரைவில் கைதாகலாம் என்ற தகவல்கள் வெளியாகிவருகின்றன. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published on: July 30, 2026 at 4:46 pm

சென்னை, ஜூலை 30, 2026: டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக முன்னாள் தி.மு.க அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் சம்மன் வழங்கியுள்ளனர். அவரை நேரில் அழைத்து விசாரிக்க திட்டமிட்டுள்ள நிலையில், நாளை (வெள்ளிக்கிழமை) என்பதால் கைது செய்யப்படும் வாய்ப்பு அதிகம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வழக்கில் ஏற்கனவே அமலாக்கத் துறையும் ஆர்வம் காட்டி வருகிறது. பல்வேறு ஆவணங்கள் மற்றும் சாட்சியங்களை ஆய்வு செய்து வரும் நிலையில், செந்தில் பாலாஜி மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படலாம் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.

செந்தில் பாலாஜி கடந்த காலத்தில் அமைச்சராக இருந்தபோது டாஸ்மாக் தொடர்பான பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுகுறித்து விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அவரை நேரில் விசாரிக்க அழைப்பது வழக்கின் முக்கிய கட்டமாகக் கருதப்படுகிறது.

இந்த விவகாரம் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி நாளைய தினம் தெளிவாகும் நிலையில், செந்தில் பாலாஜி கடும் சிக்கலை எதிர்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : டாஸ்மாக் முறைகேடு வழக்கு… செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com