ராஜினாமா மட்டும் போதாது, நீட் முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டும்.. அமைச்சர் நிர்மல்குமார்

CTR Nirmal Kumar: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை, நீட் எதிர்ப்பு மாணவர் போராட்டத்தின் வெற்றியாக தமிழ்நாடு அமைச்சர்கள் வரவேற்றுள்ளனர். ராஜினாமா மட்டும் போதாது; நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Published on: July 26, 2026 at 3:04 pm

சென்னை, ஜூலை 26, 2026: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததை, நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் முன்னெடுத்த அமைதியான மற்றும் தொடர் போராட்டத்தின் வெற்றி என்று தமிழ்நாடு அமைச்சர்கள் வரவேற்றுள்ளனர். ராஜினாமா மட்டும் போதாது, நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் கூறுகையில், “ராஜினாமா மட்டும் தீர்வல்ல. நீட் தேர்வால் லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் வெளியாகினாலும் அவை புறக்கணிக்கப்படுகின்றன. கல்வி மீண்டும் மாநிலப் பட்டியலில் கொண்டு வரப்பட வேண்டும் என்பதே தமிழ்நாடு அரசின் நீண்டகால கோரிக்கை” என்றார். மாணவர்களின் ஒற்றுமையான போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றிதான் இந்த ராஜினாமா என்றும் அவர் குறிப்பிட்டார்.

சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ.எம். ஷாஜகான், “மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னெடுத்த மிகப்பெரிய மக்கள் இயக்கத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி இது” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மதுரை, கோவைக்கு மீண்டும் அதிர்ச்சி! மெட்ரோ திட்டங்களை 2-வது முறையாக நிராகரித்த மத்திய அரசு

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com