Report Bribery via WhatsApp : அரசு அலுவலர்கள் யாரேனும் லஞ்சம் கேட்டால், பொதுமக்கள் உடனடியாக 94981 80936 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் தகவல் அனுப்பி புகார் அளிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
Report Bribery via WhatsApp : அரசு அலுவலர்கள் யாரேனும் லஞ்சம் கேட்டால், பொதுமக்கள் உடனடியாக 94981 80936 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் தகவல் அனுப்பி புகார் அளிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Published on: July 15, 2026 at 4:58 pm
சென்னை, ஜூலை 15, 2026: தமிழ்நாடு அரசு ஊழலைத் தடுக்கும் நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில் புதிய வாட்ஸ்ஆப் புகார் எண்ணை அறிவித்துள்ளது. அரசு அலுவலர்கள் யாரேனும் லஞ்சம் கேட்டால், பொதுமக்கள் உடனடியாக 94981 80936 என்ற எண்ணில் தகவல் அனுப்பி புகார் அளிக்கலாம். இந்த நடவடிக்கை, லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்க த.வெ.க அரசு மேற்கொண்டு வரும் அதிரடி முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.
முதலமைச்சர் விஜய், அரசு அலுவலர்கள் லஞ்சம் கேட்டால் கொடுக்க முடியாது என்று நேரடியாக கூறி, உடனடியாக அதுகுறித்து அரசுக்கு தெரிவிக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார். லஞ்சம் கேட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
இதற்கான சுற்றறிக்கையை தலைமைச் செயலாளர் எம். சாய் குமார் அனைத்து துறைச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ளார். மாநிலம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் வருகை தரும் இடங்களில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு அறிவிப்பு பலகைகள் கட்டாயம் காட்சிப்படுத்தப்பட வேண்டும் எனவும், அனைத்து அரசு துறைகளின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் வாட்ஸ்ஆப் புகார் எண் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) இணையதள இணைப்பை வெளியிட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்பும் இதுபோன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தாலும், பல அரசு அலுவலகங்களில் அறிவிப்பு பலகைகள் முறையாக வைக்கப்படவில்லை என்பது அரசின் கவனத்துக்கு வந்துள்ளது. புதிய வாட்ஸ்ஆப் புகார் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் நேரடியாக புகார் அளித்து ஊழலைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் பங்கெடுக்க முடியும்.
இதையும் படிங்க : “பணியிடை நீக்கம் மட்டும் போதாது”… சபரிவர்மன் உயிரிழப்பு குறித்து பிரேமலதா கண்டனம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com