ஆசிய U-19, U-23 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்… 16 இந்திய வீரர்கள் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்!

Asian Boxing : ஆசிய U-19 மற்றும் U-23 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ஆண்கள், பெண்கள் பிரிவுகளில் மொத்தம் 16 வீரர்கள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில், மேலும் 7 பேர் வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்துள்ளனர்.

Published on: July 14, 2026 at 12:01 pm

ஜகார்த்தா, ஜூலை 14 2026: இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்று வரும் ஆசிய U-19 மற்றும் U-23 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் மொத்தம் 16 இந்திய வீரர்கள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளதுடன், அரையிறுதியில் தோல்வியடைந்த 7 பேர் வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்துள்ளனர்.

பதக்கத்தை குவித்த வீராங்கணைகள்

U-19 பெண்கள் பிரிவில் குஞ்ஜன் (45-50 கிலோ), சந்திரிகா புஜாரி (51 கிலோ), ஜாய்ஷ்ரீ சிரோம் (54 கிலோ), பிராச்சி (57 கிலோ), சாஹத் (60 கிலோ), அன்ஷிகா (75 கிலோ), மேகா (80 கிலோ), பிராச்சி தோகாஸ் (+81 கிலோ) ஆகிய 8 இந்திய வீராங்கனைகள் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றனர்.

U-23 பெண்கள் பிரிவில், நிஷா (54 கிலோ) தென் கொரியாவின் ஹியேஜு லீயையும், நிகிதா சாந்த் (60 கிலோ) ஜப்பானின் சாரி கொகுஃபுவையும் வீழ்த்தினர். மேலும், காஜல் (65 கிலோ), முஸ்கான் (75 கிலோ), பிரியங்கா (+80 கிலோ) ஆகியோரும் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தனர்.

இறுதிப்போட்டியில் 16 பேர்

U-23 ஆண்கள் பிரிவில், விஷ்வநாத் சுரேஷ் (50 கிலோ) பிலிப்பைன்ஸ் வீரரை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். கங்கா (55 கிலோ) ஜப்பான் வீரரை 3-2 என்ற பிளிட் தீர்ப்பில் தோற்கடித்தார். வன்ஷஜ் (65 கிலோ) கிர்கிஸ்தான் வீரரை 4-1 என்ற கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றார். இதனுடன் இந்தியா 16 இறுதிப்போட்டி இடங்களை உறுதி செய்துள்ளது.

அதேநேரம், U-23 பெண்கள் பிரிவில் தனு (51 கிலோ), பிராச்சி (57 கிலோ), சிவானி (70 கிலோ), நைனா (80 கிலோ) ஆகியோர் வெண்கலப் பதக்கங்களை வென்றனர். U-23 ஆண்கள் பிரிவில் ஹிதேஷ் (70 கிலோ), நீரஜ் (75 கிலோ), இஷான் கட்டாரியா (+90 கிலோ) ஆகியோரும் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினர். இதன்மூலம், ஆசிய சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் பதக்க வேட்டை மேலும் வலுப்பெற்றுள்ளது.

இதையும் படிங்க : முடிவுக்கு வந்த 17 ஆண்டுகால பந்தம்.. சி.எஸ்.கே அணியில் இருந்து பிளெமிங் விலகல்!

லார்ட்ஸ் மைதானத்தில் வரலாறு படைத்த இந்திய மகளிர் அணி… இங்கிலாந்தை 270 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி புதிய சாதனை! IND-W vs ENG-W

லார்ட்ஸ் மைதானத்தில் வரலாறு படைத்த இந்திய மகளிர் அணி… இங்கிலாந்தை 270 ரன்கள்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com