நெல்லையை சுற்றிசுற்றி வந்த கரடி.. கூண்டு வைத்த பிடித்த வனத்துறையினர்!

Bear Captured in Tirunelveli : நெல்லை மக்களை அசசுறுத்திய கரடியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்துள்ளனர்.

Published on: July 10, 2026 at 1:06 pm

திருநெல்வேலி, ஜூலை 10, 2026: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே இரவு நேரங்களில் ஊருக்குள் உலா வந்த கரடியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்துள்ளனர். அனவன் குடியிருப்பு, சங்கரபாண்டியபுரம், திருப்பதியாபுரம், பசுக்கடை விளை உள்ளிட்ட பகுதிகளில் கரடி வீடுகள் மற்றும் கோயில்களுக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தியதால், அப்பகுதி மக்கள் தொடர்ந்து வனத்துறையிடம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து, அம்பாசமுத்திரம் வனக்கோட்டம் ஆம்பூர் பீட் வெளிமண்டல பகுதியில் கரடியை பிடிக்க வனத்துறை கூண்டு வைத்தது. அந்த பகுதியை தொடர்ந்து கண்காணித்த வனத்துறையினர், நேற்று அதிகாலை 1 மணியளவில் சுமார் 8 வயது உடைய கரடி ஒன்று கூண்டில் சிக்கியதை கண்டறிந்தனர்.

தகவல் அறிந்ததும் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கரடியை பாதுகாப்பாக எடுத்துச் சென்றனர். பின்னர் வனத்துறை கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்து, கரடியின் உடல் நலத்தை உறுதிப்படுத்தினர்.

அதன்பின், அந்த கரடியை முண்டந்துறை வனச்சரகம் கொடமாடி பீட்டிற்கு கொண்டு சென்று அடர்ந்த வனப்பகுதியில் பாதுகாப்பாக விடுவித்தனர். குறிப்பிடத்தக்கது என்னவெனில், இதே பகுதியில் கடந்த ஜூலை 5 ஆம் தேதி மற்றொரு கரடியும் கூண்டில் சிக்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : நெல்லையில் இரட்டைக் கொலை.. குற்றவாளி மீது துப்பாக்கிச் சூடு!

தமிழக விவசாயிகள் பாதுகாப்புக்கு முன்னுரிமை.. மாம்பழங்கள் கொள்முதலுக்கு மத்திய அரசு ஒப்புதல்! Centre Backs Farmers

தமிழக விவசாயிகள் பாதுகாப்புக்கு முன்னுரிமை.. மாம்பழங்கள் கொள்முதலுக்கு மத்திய அரசு ஒப்புதல்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com