மராட்டியத்தில் கனமழை.. அடித்துச் செல்லப்பட்ட 3,000 சிலிண்டர்கள்!

Maharashtra floods: மகாராஷ்டிராவில் பெய்த கனமழை காரணமாக, 3 ஆயிரம் சிலிண்டர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.

Published on: July 9, 2026 at 12:36 pm

மும்பை, ஜூலை 9, 2026: மகாராஷ்டிராவில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கால், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஹெச்.பி.சி.எல்) நிறுவனத்தின் படல்கங்கா எல்பிஜி பாட்டிலிங் ஆலையிலிருந்து ஆயிரக்கணக்கான எல்பிஜி சிலிண்டர்கள் அடித்துச் செல்லப்பட்டு ஆற்றில் மிதந்து செல்லும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இந்தக் காணொளிகளில், வேகமாகப் பாயும் வெள்ளநீரிலிருந்து சிலிண்டர்களை மீட்க உள்ளூர் மக்கள் தங்கள் உயிரைப் பணயம் வைப்பது தென்படுகிறது.

ராய்கட் மாவட்டத் தகவல் அதிகாரி தெரிவித்ததாவது, “கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில், பன்வேல் தாலுகா, படல்கங்கா, சவானே, கூடுதல் MIDC, பிளாட் எண் E-1/7-இல் அமைந்துள்ள HPCL பாட்டிலிங் ஆலையிலிருந்து சுமார் 3,000 எல்பிஜி சிலிண்டர்கள் (சிலவற்றில் எரிவாயு நிரப்பப்பட்டவை, சில காலியானவை) அடித்துச் செல்லப்பட்டு படல்கங்கா ஆற்றில் கலந்தன.”

இந்தச் சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆற்றில் மிதக்கும் எல்பிஜி சிலிண்டர்கள், வெடிப்பு அபாயத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அவற்றை மீட்கும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாவட்ட நிர்வாகம், பொதுமக்கள் கண்டெடுக்கும் சிலிண்டர்களை உடனடியாக HPCL நிறுவனம், அருகிலுள்ள HPCL விநியோகஸ்தர், கலப்பூர் அல்லது பென் வட்டாட்சியர் அலுவலகம், அல்லது பென் துணைப் பிரிவு அதிகாரி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

இதையும் படிங்க : இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம்.. ராமர் கோவில் நிதி கையாடல் குறித்து அகிலேஷ் யாதவ்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com