Kalyan Jewellers Shares Fall : கல்யாண் ஜூவல்லரி பங்குகள் 9 சதவீதம் வரை சரிவை கண்டுள்ளன; இதன் பின்னணி என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
Kalyan Jewellers Shares Fall : கல்யாண் ஜூவல்லரி பங்குகள் 9 சதவீதம் வரை சரிவை கண்டுள்ளன; இதன் பின்னணி என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

Published on: July 7, 2026 at 5:45 pm
மும்பை, ஜூலை 7, 2026: கல்யாண் ஜூவல்லர்ஸ் பங்குகள், வலுவான முதல் காலாண்டு (Q1 FY2027) வருவாய் வளர்ச்சியையும் (38% YoY) மீறி, முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாததால் 9% சரிந்தன. டைட்டன் நிறுவனத்தின் அதிக வலுவான வளர்ச்சி (41% YoY) மற்றும் சந்தை ஒப்பீடுகள், முதலீட்டாளர்களின் மனநிலையை பாதித்தன.
இதற்கிடையில், கல்யாண் ஜூவல்லரி பங்குகள் இந்தியாவில் 38% மற்றும் சர்வதேச சந்தையில் 35% வளர்ச்சி இருந்தது. இது, 112% வருவாய் உயர்வு ஆகும். எனினும், வலுவான வளர்ச்சி இருந்தாலும், முதலீட்டாளர்கள் டைட்டன் நிறுவனத்தின் அதிகமான வளர்ச்சியுடன் ஒப்பிட்டு, கல்யாணின் வளர்ச்சி குறைவாக உள்ளது என கருதினர்.
இதனால் கல்யாண் ஜூவல்லரி நிறுவன பங்குகள் 9 சதவீதம் வரை சரிவை சந்தித்தன. டைட்டன் நிறுவனம் சர்வதேச அளவில் 128 சதவீதம் வளர்ச்சியை கண்டுள்ளது. இதனால் பங்கு விலை 3.5 சதவீதம் முதல் 4 சதவீதம் வரை உயர்வை கண்டுள்ளன. அதேநேரம் கல்யாண் ஜூவல்லர்ஸ் பங்குகள் 9 சதவீதம் சரிவை சந்தித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : சென்னையில் இன்று தங்கம் விலை எப்படி? நகை வாங்கலாமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com