Modi’s 6-Day Foreign Tour: இந்தோனேசியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு 6 நாள் பயணத்தை பிரதமர் மோடி மேற்கொள்கிறார்.
Modi’s 6-Day Foreign Tour: இந்தோனேசியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு 6 நாள் பயணத்தை பிரதமர் மோடி மேற்கொள்கிறார்.

Published on: July 6, 2026 at 7:18 pm
புதுடெல்லி, ஜூலை 6, 2026: பிரதமர் நரேந்திர மோடி, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு ஆறு நாள் பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்தோனேசியா அதிபர் பிரபோவோ சுபியான்டோவின் அழைப்பின் பேரில் ஜூலை 6 முதல் 8 வரை அவர் யோக்யகர்த்தா உள்ளிட்ட பகுதிகளைப் பார்வையிடுகிறார். 2018ஆம் ஆண்டு அவர் மேற்கொண்ட பயணத்தின் போது மேம்படுத்தப்பட்ட ‘விரிவான உத்திசார் கூட்டாண்மை’ (Comprehensive Strategic Partnership) இந்தப் பயணத்தின் மூலம் மேலும் வலுப்படுத்தப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியாவில் அவர் இந்திய வம்சாவளியினரைச் சந்தித்து உரையாடுவார். அதிபர் பிரபோவோவுடன் இணைந்து யோக்யகர்த்தாவில் உள்ள பிரம்பனன் சிவன் கோவிலை பார்வையிடவுள்ளார். 2025 குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக இந்தியாவுக்கு வந்த அதிபர் பிரபோவோவின் பயணத்தைத் தொடர்ந்து, இந்த விஜயம் இரு நாடுகளின் உறவை மேலும் வலுப்படுத்தும் எனக் கூறப்படுகிறது.
அதன்பின், ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பனீஸின் அழைப்பின் பேரில் மோடி மெல்போர்னுக்குச் செல்கிறார். பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு, கல்வி, மக்கள் நடமாட்டம், தொழில்நுட்பங்கள், விளையாட்டு மற்றும் மக்களிடையேயான உறவுகள் குறித்த விவாதங்கள் நடைபெறும். இந்தியா–ஆஸ்திரேலியா இடையிலான விரிவான உத்திசார் கூட்டாண்மையை இந்தப் பயணம் வலுப்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்பிறகு, நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனின் அழைப்பின் பேரில் மோடி ஆக்லாந்திற்குச் செல்கிறார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் லக்சன் இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணத்தைத் தொடர்ந்து, இருதரப்பு உறவுகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தை மேலும் வளர்க்கும் வகையில் இந்த விஜயம் அமைகிறது. பொருளாதாரம் மற்றும் வர்த்தக ரீதியிலான உறவுகள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : உழவர் சாவு வேதனை.. பயிர்க்கடனை முழுமையான தள்ளுபடி செய்க.. அன்புமணி ராமதாஸ்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com