VB G Ram G Act: விக்ஷித் பாரத் ஜி ராம் ஜி திட்டத்தால் தமிழ்நாடு அரசுக்கு கூடுதலாக எவ்வளவு செலவு ஆகும் தெரியுமா?
VB G Ram G Act: விக்ஷித் பாரத் ஜி ராம் ஜி திட்டத்தால் தமிழ்நாடு அரசுக்கு கூடுதலாக எவ்வளவு செலவு ஆகும் தெரியுமா?

Published on: July 3, 2026 at 9:21 pm
சென்னை, ஜூலை 3, 2026: விக்ஷித் பாரத் ஜி ராம் ஜி (VB-GRAMG) திட்டம் தமிழ்நாடு அரசுக்கு கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்துகிறது. முந்தைய 100 நாள் வேலை திட்டத்தில் மத்திய அரசு 90% நிதி வழங்கி, மாநிலங்கள் 10% மட்டும் வழங்கின. ஆனால் புதிய திட்டத்தில் நிதி பகிர்வு 60:40 ஆக மாற்றப்பட்டதால், தமிழ்நாடு அரசு தனது பங்காக 40% செலவினை ஏற்க வேண்டியுள்ளது. அதாவது, முந்தைய திட்டத்தில் 10% நிதி மட்டுமே மாநிலம் வழங்கியது. தற்போது, புதிய திட்டத்தில் 40% நிதி வழங்க வேண்டும். இதனால், தமிழ்நாடு அரசின் செலவு 4 மடங்கு அதிகரிக்கும்.
உதாரணமாக, ஒரு ஆண்டில் 10,000 கோடி ரூபாய் செலவாகும் திட்டத்தில், முந்தைய நிலையில் தமிழ்நாடு 1,000 கோடி ரூபாய் செலவிட்டது. இப்போது அதே திட்டத்தில் 4,000 கோடி ரூபாய் செலவிட வேண்டியிருக்கும்.
இந்த நிலையில், மாநிலங்களுக்கு அதிக நிதிச்சுமை, கூட்டாட்சி தத்துவம் பாதிப்பு என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
இந்நிலையில், இந்த மாற்றம் தமிழ்நாட்டில் கிராமப்புற தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என்ற நல்ல அம்சத்தையும், மாநில நிதி சுமை அதிகரிக்கும் என்ற சவாலையும் ஒரே நேரத்தில் கொண்டுவருகிறது.
இதையும் படிங்க : இந்தியாவின் கடன் 762.8 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்வு.. அபாயங்கள், விளைவுகள் என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com