Industrial Prodution growth: இந்திய நாட்டின் தொழில்துறை வளர்ச்சி 5 மாதங்களில் இல்லாத வகையில் வளர்ச்சி கண்டுள்ளது.
Industrial Prodution growth: இந்திய நாட்டின் தொழில்துறை வளர்ச்சி 5 மாதங்களில் இல்லாத வகையில் வளர்ச்சி கண்டுள்ளது.

Published on: June 30, 2026 at 4:53 pm
புதுடெல்லி, ஜூன் 30, 2026: இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி மே 2026-இல் 5.1% வளர்ச்சி கண்டுள்ளது. இது கடந்த 5 மாதங்களில் மிக உயர்ந்த வளர்ச்சியாகும். உற்பத்தித் துறை மற்றும் மின்சாரம், எரிவாயு விநியோகத் துறையின் வலுவான முன்னேற்றம் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகும்.
தொழில்துறை வளர்ச்சி நிலை
மே 2026-இல் தொழில்துறை உற்பத்தி (IIP) 5.1% உயர்ந்தது. ஏப்ரல் மாதத்தில் 4.9% இருந்த வளர்ச்சி மே மாதத்தில் அதிகரித்தது. புதிய அடிப்படை ஆண்டு 2022-23 அடிப்படையில் வெளியிடப்பட்ட தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
உற்பத்தித் துறை முன்னேற்றம்
உற்பத்தித் துறை, IIP-இன் 75% பங்கைக் கொண்டது, 5.5% வளர்ச்சி கண்டது. அந்த வகையில், 23 உற்பத்தி குழுக்களில் 16 குழுக்கள் நேர்மறை வளர்ச்சி பெற்றன. இதில், மோட்டார் வாகன உற்பத்தி – 14.5%, மின்சார உபகரணங்கள் – 20.8%, அடிப்படை உலோகங்கள் – 4.6% என முக்கிய பங்காளர்கள் ஆவார்கள்.
மின்சாரம் மற்றும் பிற துறைகள்
மின்சாரம் மற்றும் பிற துறைகளை பொறுத்தமட்டில், மின்சாரம் மற்றும் எரிவாயு விநியோகம் – 9.9% வளர்ச்சி கண்டுள்ளது. அதேநேரம், நீர் விநியோகம், கழிவு மேலாண்மை – 5.5% வளர்ச்சியும், சுரங்கத் துறை – (-)1.6% வீழ்ச்சியும் கண்டுள்ளது. பயன்பாடு அடிப்படையில் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் மூலதனப் பொருட்கள் – 12.9% உயர்வு கண்டுள்ளன. இந்த வளர்ச்சி வேலைவாய்ப்புகள் உருவாக்கம் மற்றும் வருமான உயர்வு ஆகியவற்றுக்கு வழிவகுக்கும். மேலும், மூலதன முதலீடுகள் அதிகரிப்பு எதிர்காலத்தில் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : பிரென்ட் கச்சா எண்ணெய் $75 ஆக சரிவு.. பிப்ரவரி–மே மாதங்களில் $120!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com