வெனிசுலா இரட்டை நிலநடுக்கம்.. 162 பேர் உயிரிழப்பு!

Venezuela earthquake : வெனிசுலா இரட்டை நிலநடுக்கத்தில் சிக்கி 162 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில் இடிபாடுகளில் 1,000 பேர் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Published on: June 25, 2026 at 5:08 pm

கராகஸ், ஜூன் 25, 2026: வெனிசுலா நாட்டில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கம் பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரப்பூர்வமாக 162 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) பலி எண்ணிக்கை 10,000 இருக்கும் என எச்சரித்துள்ளது.

வெனிசுலாவின் தலைநகர் காரக்கஸ் மற்றும் அதன் அருகிலுள்ள லா குவாய்ரா பகுதிகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த பூமி அதிர்வு, இரட்டை நிலநடுக்கம் என அழைக்கப்படுகிறது.

இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்ததால், நூற்றுக்கணக்கானோர் சிக்கினார்கள். தற்போது 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என இடைக்கால தலைவர் டெல்சி ரொட்ரிகஸ் தெரிவித்துள்ளார்.

முக்கியமான சிமோன் போலிவர் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. காரக்கஸ் மெட்ரோ சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. லா குவாய்ரா மாநிலம் “பேரழிவு மண்டலம்” என அறிவிக்கப்பட்டுள்ளது.
மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. பல குழந்தைகள் இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டதாக தொலைக்காட்சி காட்சிகள் காட்டியுள்ளன.

உலக நாடுகள் வெனிசுலாவுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளன. அர்ஜென்டினா, பிரேசில், எக்வடார், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் மீட்பு குழுக்கள், மருத்துவ உதவிகள் மற்றும் மனிதாபிமான உதவிகளை அனுப்புவதாக அறிவித்துள்ளன. இடைக்கால தலைவர் ரொட்ரிகஸ், “இது ஒரு உண்மையான பேரழிவு. உயிரிழந்த குடும்பங்களுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : லண்டனில் இந்திய இளைஞர் குத்திக் கொலை.. போலீசார் விசாரணை!

பாகிஸ்தானுக்கு சுற்றுலா சென்ற 9 வயது சிறுமி சுட்டுக்கொலை.. தவறுதலாக சுட்டதாக போலீஸ்காரர் வாக்குமூலம்!
Australian Girl Killed in Pakistan

பாகிஸ்தானுக்கு சுற்றுலா சென்ற 9 வயது சிறுமி சுட்டுக்கொலை.. தவறுதலாக சுட்டதாக போலீஸ்காரர்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com