Madurai Marathon Row : மாரத்தான் போட்டியில் மாணவ, மாணவிகள் 4 கி.மீ. தூரம் சென்றபோது கடும் வெயிலின் காரணமாக சிலர் மயக்கமடைந்தனர்.
Madurai Marathon Row : மாரத்தான் போட்டியில் மாணவ, மாணவிகள் 4 கி.மீ. தூரம் சென்றபோது கடும் வெயிலின் காரணமாக சிலர் மயக்கமடைந்தனர்.

Published on: June 25, 2026 at 12:30 pm
மதுரை, ஜூன் 25, 2026: தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன் மதுரையில் நடைபெற்ற போதைப் பொருட்கள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் குற்றங்களுக்கான விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் மாணவர்கள் பங்கேற்றபோது ஏற்பட்ட சூழ்நிலையைப் பற்றி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மாரத்தான் போட்டியில் மாணவ, மாணவிகள் 4 கி.மீ. தூரம் சென்றபோது கடும் வெயிலின் காரணமாக சிலர் மயக்கமடைந்தனர். அப்போது அவர்களுக்கு அமைச்சர் முதலுதவி செய்ததாகவும், ஆனால் அந்த செயலை ஊடகங்களில் தவறான நோக்கத்தில் சித்தரித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு பெண்ணின் தகப்பனாக மனிதாபிமான உணர்வோடு தான் உதவி செய்ததாகவும், அதை தவறாக சித்தரிப்பது மிகுந்த வேதனையளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தனது செயலுக்கு உள்நோக்கம் கற்பிப்பது அதிர்ச்சியளிப்பதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தனது அணுகுமுறை தவறாக புரிந்து கொள்ளப்பட்ட நிலைமை ஏற்பட்டதற்காக வருத்தம் தெரிவித்துக் கொண்டார். இந்த பிரச்சினையில் தனது செயலின் உண்மையான நோக்கம் மனிதாபிமானம் மட்டுமே எனவும், தவறான புரிதலால் ஏற்பட்ட சூழ்நிலைக்கு வருத்தம் தெரிவித்ததாகவும் அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க ‘கடவுள் மறுப்பு பெரியார் கொள்கை அல்ல’.. கி. வீரமணி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com