பழநி முருகன் கோவிலில் விரைவு தரிசனம்.. 3 பேர் பணியிடை நீக்கம்!

Palani Temple Bribery Exposed: பழநி முருகன் கோயிலில் விரைவு தரிசனம் செய்து வைப்பதாகக் கூறி, பக்தர்களிடம் லஞ்சம் பெற்ற விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Published on: June 25, 2026 at 1:26 pm

பழநி, ஜூன் 25, 2026: பழநி முருகன் கோயிலில் விரைவு தரிசனம் செய்து வைப்பதாகக் கூறி பக்தர்களிடம் லஞ்சம் பெற்ற விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளியூரிலிருந்து வந்த மூன்று பக்தர்கள் விரைவு தரிசனம் தொடர்பாக அங்கிருந்த தனியார் பாதுகாப்பு காவலர்களிடம் கேட்டபோது, அவர்கள் ₹3,000 லஞ்சம் பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த லஞ்சம் பெற்ற மூன்று காவலர்கள் விதிகளை மீறி அந்த பக்தர்களை விரைவு தரிசனத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதனால் கோயில் நிர்வாகத்தில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.

கோயில் இணை ஆணையர் மாரிமுத்து சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, சம்பந்தப்பட்ட மூன்று காவலர்களும் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

மேலும், இந்த முறைகேட்டில் சம்பந்தப்பட்ட தனியார் பாதுகாப்பு நிறுவனத்திற்கு ₹5 லட்சம் அபராதம் விதித்து இணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இந்த நடவடிக்கை, கோயிலில் பக்தர்களின் நம்பிக்கையை பாதுகாக்கும் வகையில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : ‘கடவுள் மறுப்பு பெரியார் கொள்கை அல்ல’.. கி. வீரமணி

 காவிரி நீர் தமிழ்நாட்டுக்கு சொந்தம்.. மேகதாதுவில் ஓர் செங்கலை கூட வைக்க அனுமதியோம்.. அமைச்சர் விஸ்வநாதன்!
Minister Viswanathan on Mekedatu

 காவிரி நீர் தமிழ்நாட்டுக்கு சொந்தம்.. மேகதாதுவில் ஓர் செங்கலை கூட வைக்க அனுமதியோம்.. அமைச்சர் விஸ்வநாதன்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com