27 மின்சார ரயில்கள் ரத்து.. முழு விவரம்.. அரக்கோணம் பயணிகளே நோட் பண்ணுங்க!

27 Electric Trains Cancelled: ஜூன் 27 மற்றும் 28ஆம் தேதிகளில் 27 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.

Published on: June 25, 2026 at 1:37 pm

சென்னை, ஜூன் 25, 2026: அரக்கோணம் ரயில் நிலைய பணிமனையில் தொழில்நுட்ப மறுசீரமைப்புப் பணிகள் நடைபெறுவதால் ஜூன் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் ரயில் சேவைகள் பாதிக்கப்படுகின்றன. இதன் காரணமாக பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

அரக்கோணம், வேலூர், திருச்சானூர், திருத்தணி, காட்பாடி, செங்கல்பட்டு, சென்னை மூர் மார்க்கெட் உள்ளிட்ட வழித்தடங்களில் இயக்கப்படும் 27 புகர் மின்சார ரயில்கள் (இமு, மெமு) முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன. இதனால் பயணிகள் சிரமம் அடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரக்கோணம் – வேலூர், அரக்கோணம் – திருச்சானூர், அரக்கோணம் – திருத்தணி உள்ளிட்ட பல சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல் சென்னை மூர் மார்க்கெட் – அரக்கோணம், செங்கல்பட்டு – அரக்கோணம், திருத்தணி – அரக்கோணம் உள்ளிட்ட சேவைகளும் பாதிக்கப்படுகின்றன.

பயணிகள் முன்கூட்டியே ரயில் நேர அட்டவணையை சரிபார்த்து பயணத்தை திட்டமிடுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த நடவடிக்கை, பணிகள் முடிவடைந்த பின் சேவைகள் சீராக நடைபெறுவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : பழநி முருகன் கோவிலில் விரைவு தரிசனம்.. 3 பேர் பணியிடை நீக்கம்!

எஸ்யுவி கூபே பிரிவில் போட்டியை தீவிரப்படுத்தும் சிட்ரோயன்… புதிய கம்ஃபர்ட் எடிஷன் அறிமுகம்!
Car Launch

எஸ்யுவி கூபே பிரிவில் போட்டியை தீவிரப்படுத்தும் சிட்ரோயன்… புதிய கம்ஃபர்ட் எடிஷன் அறிமுகம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com