தி.மு.க முன்னாள் அமைச்சர் எ.வ வேலு மீது வழக்குப்பதிவு.. பரபரப்பு தகவல்கள்!

E.V. Velu Booked in Corruption Case : தி.மு.க முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு உள்ளிட்ட 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

Published on: June 25, 2026 at 12:19 pm

சென்னை, ஜூன் 25, 2026: முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பல கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, எ.வ.வேலு தொடர்புடைய 13 இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையின் போது பல்வேறு ஆவணங்கள், கணக்குகள் மற்றும் சொத்து விவரங்கள் பரிசோதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் உட்பட மொத்தம் 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. சாலை அமைப்பில் ஒப்பந்தங்கள் மற்றும் செலவினங்களில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் புகாரின் அடிப்படையில் விசாரணை தீவிரமாக நடைபெறுகிறது.

முன்னாள் அமைச்சர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணை முடிவுகள் வெளிவரும் வரை இந்த வழக்கு தமிழக அரசியல் சூழலில் முக்கியமான விவாதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : ‘கடவுள் மறுப்பு பெரியார் கொள்கை அல்ல’.. கி. வீரமணி

மக்கள் சேவைக்கு புதிய முகவரி! பெரம்பூரில் எம்.எல்.ஏ. அலுவலகத்தை திறந்துவைத்தார் முதலமைச்சர் விஜய் Perambur MLA Office

மக்கள் சேவைக்கு புதிய முகவரி! பெரம்பூரில் எம்.எல்.ஏ. அலுவலகத்தை திறந்துவைத்தார் முதலமைச்சர் விஜய்

சொத்துக் குவிப்பு வழக்கு.. நேரில் ஆஜராவதில் இருந்து எம்.ஆர்.கே பன்னீர் செல்வத்துக்கு விலக்கு! MRK Panneerselvam

சொத்துக் குவிப்பு வழக்கு.. நேரில் ஆஜராவதில் இருந்து எம்.ஆர்.கே பன்னீர் செல்வத்துக்கு விலக்கு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com