FIFA World Cup 2026: உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் உஸ்பெகிஸ்தானை 3-1 என்ற கோல் கணக்கில் கொலம்பியா வீழ்த்தியது.
FIFA World Cup 2026: உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் உஸ்பெகிஸ்தானை 3-1 என்ற கோல் கணக்கில் கொலம்பியா வீழ்த்தியது.

Published on: June 18, 2026 at 12:52 pm
Updated on: June 18, 2026 at 12:54 pm
மெக்சிகோ, ஜுன் 18 2026: உலகக்கோப்பை கால்பந்து தொடரின் குரூப் ‘கே’ பிரிவு ஆட்டத்தில் கொலம்பியா மற்றும் முதல் முறையாக உலகக்கோப்பையில் விளையாடும் உஸ்பெகிஸ்தான் அணிகள் மோதின. மெக்சிகோ நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய கொலம்பியா, முதல் பாதியின் 40-வது நிமிடத்தில் டேனியல் முனோஸ் அடித்த கோலின் மூலம் 1-0 என்ற முன்னிலை பெற்றது.
உஸ்பெகிஸ்தான், இரண்டாம் பாதியில் உஸ்பெகிஸ்தான் தாக்குதலை அதிகரித்தது. 60வது நிமிடத்தில் எல்டோர் ஷோமுரோடோவின் வாலியை கீப்பர் காமிலோ வர்காஸ் தவறவிட்டதால், அப்போஸ்பெக் ஃபய்ஸுல்லாயேவ் தலைப்பந்தால் சமநிலை பெற்றார். இது உஸ்பெகிஸ்தானின் உலகக் கோப்பை வரலாற்றில் முதல் கோலாகும்.
ஆனால் அந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. 65-வது நிமிடத்தில் லூயிஸ் டியாஸ் அழகான கோல் அடித்து மீண்டும் கொலம்பியாவை முன்னிலைக்கு கொண்டு சென்றார். தொடர்ந்து கடைசி நேரம் வரை போராடிய உஸ்பெகிஸ்தான் அணிக்கு பல வாய்ப்புகள் கிடைத்தபோதும் அவற்றை கோல்களாக மாற்ற முடியவில்லை.
கூடுதல் நேரத்தின் 9-வது நிமிடத்தில் மாற்று வீரர் ஜாமின்டன் காம்பாஸ் தலையால் கோல் அடித்து வெற்றியை உறுதி செய்தார். இதன் மூலம் கொலம்பியா 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று குரூப் ‘கே’ பிரிவில் வெற்றிகரமாக தனது உலகக்கோப்பை பயணத்தை தொடங்கியது. லூயிஸ் டியாஸ் ஒரு கோல் அடித்து மற்றொரு கோலுக்கு உதவி செய்ததால் ஆட்டத்தின் நாயகனாக திகழ்ந்தார்.
அடுத்ததாக, கொலம்பியா DR காங்கோவை குவாடலஜாராவில் எதிர்கொள்ளும், உஸ்பெகிஸ்தான் போர்ச்சுகலை ஹூஸ்டனில் சந்திக்கும்.
இதையும் படிங்க பாகிஸ்தானை பதம் பார்த்த இந்தியா.. வெற்றியுடன் தொடக்கம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com