Women’s Nations Hockey Cup: இந்திய மகளிர் ஹாக்கி அணி, நியூசிலாந்து ஆக்லாந்தில் நடைபெற்ற FIH ஹாக்கி மகளிர் நேஷன்ஸ் கப் போட்டியில் ஜப்பானை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
Women’s Nations Hockey Cup: இந்திய மகளிர் ஹாக்கி அணி, நியூசிலாந்து ஆக்லாந்தில் நடைபெற்ற FIH ஹாக்கி மகளிர் நேஷன்ஸ் கப் போட்டியில் ஜப்பானை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

Published on: June 17, 2026 at 7:07 pm
ஆக்லாந்து, ஜுன் 17 2026: நியூசிலாந்தின் ஆக்லாந்தில் உள்ள நார்த் ஹார்பர் தேசிய ஹாக்கி மையத்தில் நடைபெற்ற எப்.ஐ.எச். மகளிர் நேஷன்ஸ் கப் 2026 ஹாக்கி தொடரின் ‘ஏ’ பிரிவு இரண்டாவது லீக் ஆட்டத்தில் இந்தியா-ஜப்பான் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதிப் போட்டிக்கான இடத்தை உறுதி செய்துள்ளது. முன்னதாக அமெரிக்காவையும் தற்போது ஜப்பானையும் வீழ்த்திய இந்தியா, 6 புள்ளிகளுடன் ‘பூல் A’-யில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதனால் இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டனும் ஆட்டநாயகியுமான சலிமா டெட்டே மற்றும் லால்ரெம்சியாமி தலா ஒரு கோல் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர். ஜப்பான் அணிக்காக ஹிராமிட்சு ஐ மட்டுமே ஒரு கோல் அடித்தார். இந்திய மிட்ஃபீல்டர் ஜோதி தனது 100-வது சர்வதேச மூத்த அணிப் போட்டியில் களமிறங்கி சிறப்பான மைல்கல்லை எட்டினார். இந்திய அணி, இதுவரை தோல்வியை சந்திக்காமல் சிறப்பாக விளையாடி வருகிறது.
இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நாளை அதிகாலை 4.15 மணிக்கு உருகுவே அணியை எதிர்கொள்கிறது. இதேவேளையில், ‘ஏ’ பிரிவிலிருந்து இரண்டாவது அரையிறுதி வாய்ப்புக்காக ஜப்பான் மற்றும் அமெரிக்க அணிகள் மோத உள்ளன. எப்.ஐ.எச். மகளிர் நேஷன்ஸ் கப் தொடரின் அனைத்து போட்டிகளும் Watch.Hockey தளத்தில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க பாகிஸ்தானை பதம் பார்த்த இந்தியா.. வெற்றியுடன் தொடக்கம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com