உதயசூரியன் சின்னத்தில் வெற்றி.. ம.தி.மு.க எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்வார்களா? வைகோ பதில்!

Vaiko Thanks CM Vijay : தமிழக முதல்வர் விஜயை சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்தது தனக்கு மிகுந்த மன நிறைவை அளித்ததாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

Published on: June 17, 2026 at 9:10 pm

சென்னை, ஜுன் 17 2026: சென்னை தலைமைச் செயலகத்தில் மதிமுக பொதுச்செயலாளர் இன்று முதலமைச்சர் விஜய்யை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு தனக்கு மன நிறைவை தந்ததாக வைகோ தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் விஜய் உடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “முதல்வர் 45 நிமிடங்கள் என்னிடம் பேசுவதற்கு நேரம் ஒதுக்கி தந்ததற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்”

இந்த சந்திப்பு எனக்கு மன நிறைவை தந்தது. முதல்வருடன் நடந்த உரையாடல் முக்கியமானதாக இருந்தது. மேலும், பல்வேறு அரசியல் மற்றும் பொதுநல விவகாரங்கள் குறித்து இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வைகோ, “முதல்வர் விஜயுடன் நேரடியாக பேசும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு பெரும் திருப்தியை அளித்தது. அவர் அளித்த நேரம், காட்டிய அக்கறை எனக்கு மன நிறைவை தந்தது” என தெரிவித்தார்.

தொடர்ந்து, மதிமுக எம்எல்ஏ-க்கள் ராஜினாமா செய்கிறார்களா என்ற கேள்விக்கு பதிலளித்த வைகோ, “யூகங்களுக்கு பதில் சொல்ல இயலாது, அது பற்றி இப்போதைக்கு பதில் சொல்ல இயலாது” என்று மதிமுக எம்எல்ஏ-க்களின் ராஜினாமா குறித்த ஊகங்களுக்கு வைகோ நேரடியாக பதில் அளிக்க மறுத்து விட்டார்.

2026 சட்டமன்ற தேர்தலில், மதிமுக வேட்பாளர்கள் தங்களது சொந்தக் கட்சியின் சின்னத்தில் (பம்பரம்) போட்டியிடாமல் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டார்கள்; இதற்கிடையில் தமிழ் நாட்களாக வைகோ, தமிழக வெற்றி கழகத்துடன் நெருக்கம் காட்டி வருகிறார். இதனால் மதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இருவர், தங்களது MLA பதவியை ராஜினாமா செய்வார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதையும் படிங்க நாகர்கோவில் மாநகராட்சிக்கு புதிய ஆணையர்.. யார் இந்த ஐஸ்வர்யா ராமநாதன்?

மக்கள் சேவைக்கு புதிய முகவரி! பெரம்பூரில் எம்.எல்.ஏ. அலுவலகத்தை திறந்துவைத்தார் முதலமைச்சர் விஜய் Perambur MLA Office

மக்கள் சேவைக்கு புதிய முகவரி! பெரம்பூரில் எம்.எல்.ஏ. அலுவலகத்தை திறந்துவைத்தார் முதலமைச்சர் விஜய்

சொத்துக் குவிப்பு வழக்கு.. நேரில் ஆஜராவதில் இருந்து எம்.ஆர்.கே பன்னீர் செல்வத்துக்கு விலக்கு! MRK Panneerselvam

சொத்துக் குவிப்பு வழக்கு.. நேரில் ஆஜராவதில் இருந்து எம்.ஆர்.கே பன்னீர் செல்வத்துக்கு விலக்கு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com