சவ ஊர்வலத்தில் காரை மறித்து தாக்குதல்… மூதாட்டி உட்பட 5 பேர் காயம்

Mayiladuthurai: மயிலாடுதுறையில் சவ ஊர்வலத்தை கடக்க முயன்ற காரை, போதையில் இருந்த 50க்கும் மேற்பட்டோர் மறித்து தாக்கியதில் 80 வயது மூதாட்டி உட்பட 5 பேர் காயமடைந்தனர்.

Published on: June 16, 2026 at 12:11 pm

மயிலாடுதுறை, ஜுன் 16 2026: சீர்காழி தாலுகா திருவெண்காடு மேலவீதியைச் சேர்ந்தவர் மூர்த்தி. அவர் தனது தாயார் பவுன்மதி (80), மனைவி அருண்மொழி (50), தம்பி மனைவி தேவி, தேவியின் மகள் லோஷினி (22), மகன் சபரிஷ் ஆகியோருடன் காரில் தஞ்சாவூர் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது வழியில், குத்தாலம் அருகே கடலங்குடி பகுதியில் சவ ஊர்வலம் வந்ததால், அதை கார் கடக்க முயன்றபோது போதை கும்பல் காரை பிடித்து உலுக்கியது.

மூதாட்டி மீது தாக்குதல்

அப்போது, ஒருவர் காரின் மேற்கூரையில் ஏறி நிறுத்த சொல்லி மிரட்டியுள்ளார். சபரிஷ் காரை நிறுத்தியவுடன், கும்பல் அவரை தாக்கத் தொடங்கியது. தொடர்ந்து, 50க்கும் மேற்பட்டோர் காரின் அனைத்து கண்ணாடிகளையும் உடைத்து சேதப்படுத்தினர். மூதாட்டி பவுன்மதியின் கண்ணில் காயம் ஏற்பட்டது. இளம்பெண் லோஷினி கையைப் பிடித்து இழுத்து தாக்கப்பட்டார். அவரது தாயார் தேவியின் முடியைப் பிடித்து இழுத்து தாக்கினர்.

இந்த தாக்குதலில் காயமடைந்த மூதாட்டி பவுன்மதி, தேவி, லோஷினி ஆகியோர் பொதுமக்கள் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சாலை மறியல்

சம்பவம் குறித்து உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறி அவர்களை அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக குத்தாலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. கிறிஸ்தவ மதபோதகர் கைது.. தூத்துக்குடியில் பரபரப்பு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com