61 நாள் மீன்பிடி தடைக்காலம் நிறைவு.. கடலுக்குள் பாய்ந்த படகுகள்.. மீன் விலை குறையுமா?

Fish prices may ease post-ban : தமிழ்நாட்டில் 61 நாள்கள் மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்தது. மீன்பிடிக்க கடலுக்குள் படகுகள் சென்றுள்ள நிலையில், மீன் விலை குறையுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Published on: June 15, 2026 at 12:49 pm

தூத்துக்குடி, ஜூன் 15, 2026: தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் ஏப்ரல் 16 முதல் ஜூன் 15 வரை விசைப்படகுகளில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படும் நிலையில், இந்த ஆண்டு 61 நாட்கள் தடை காலம் நிறைவடைந்தது. இதனால், நேற்று நள்ளிரவு முதல் தடை நீக்கப்பட்டு, இன்று அதிகாலை மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, தருவைகுளம், வேம்பார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்குள் புறப்பட்டன. 61 நாட்கள் கழித்து மீண்டும் கடலுக்குள் செல்லும் சந்தர்ப்பம் கிடைத்ததால், விசைப்படகுகள் ஒன்றோடு ஒன்று மோதியபடி கடலுக்குள் புறப்பட்டன.

இந்த தடை காலம் நாட்டுப் படகுகள் மற்றும் கரையோர மீன்பிடிப்பில் ஈடுபடுபவர்களுக்கு பொருந்தவில்லை. ஆனால் விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் கடலுக்குள் செல்ல முடியாததால், கடந்த இரண்டு மாதங்களாக மீன்களின் விலை கடுமையாக உயர்ந்தது.

தடை நீக்கப்பட்டதால், மீனவர்கள் மீண்டும் கடலுக்குள் சென்று மீன்பிடிக்கத் தொடங்கியுள்ளனர். இதனால், மீன் விலை குறையும் எனவும், கடலோர பகுதிகளில் மீனவர்களின் வாழ்வாதாரம் மீண்டும் சீராகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க அந்நிய செலாவணி கையிருப்பு சரிவு.. என்ன காரணம்?

விண்வெளியில் மட்டுமல்ல… சந்தை மதிப்பிலும் பறக்கும் ஸ்பேஸ்X.. அமேசானை பின்னுக்குத் தள்ளி சாதனை SpaceX Tops Amazon

விண்வெளியில் மட்டுமல்ல… சந்தை மதிப்பிலும் பறக்கும் ஸ்பேஸ்X.. அமேசானை பின்னுக்குத் தள்ளி சாதனை

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com