சூர்யாவின் கருப்பு, அக்ஷயின் பூத் பங்களா.. எந்த ஓ.டி.டி தளத்தில் கிடைக்கும்?

OTT releases this week : நடிகர் சூர்யாவின் கருப்பு மற்றும் அக்ஷய் குமாரின் பூத் பங்ளா உள்ளிட்ட திரைப்படங்கள் ஒ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளன.

Published on: June 14, 2026 at 12:46 pm

சென்னை, ஜூன் 14, 2026: கடந்த வார இறுதியில் ஒ.டி.டி தளங்களில் பல முக்கிய படங்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில், சூர்யா நடித்த கருப்பு பிரைம் வீடியோவிலும், அக்‌ஷய் குமார் நடித்த பூத் பங்களா நெட்ஃபிளிக்ஸ் தளத்திலும், அலி ஃபசல் நடித்துள்ள ராக் பிரைம் வீடியோவிலும் வெளியாகியுள்ளன. இவை அனைத்தும் ஜூன் 12 முதல் ஸ்ட்ரீமிங் தளங்களில் கிடைக்கின்றன.

முக்கிய படங்கள்

கருப்பு – ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்த மாஸ்-ஆக்ஷன் டிராமா. திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிய பிறகு ஜூன் 12 முதல் அமேசான் பிரைம் வீடியோ-வில் வெளியாகியுள்ளது.

பூத் பங்களா – அக்‌ஷய் குமார் மற்றும் பிரியதர்ஷன் இணைந்து நடித்துள்ள ஹாரர்-காமெடி படமான இது, ஜூன் 12 முதல் நெட்ஃபிளிக்ஸ் -இல் கிடைக்கிறது.

ராக் – 1970களின் டெல்லியை மையமாகக் கொண்ட குற்றத் த்ரில்லர். அலி ஃபசல், சோனாலி பென்ட்ரே, ஆமிர் பஷீர் நடித்துள்ள இந்த தொடர் ஜூன் 12 முதல் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

இந்த வாரம் ஒ.டி.டி தளங்களில் ஹாரர்-காமெடி, குற்றத் த்ரில்லர், ரொமான்ஸ், ஆக்ஷன் உள்ளிட்ட பல்வேறு வகை படங்கள் வெளியாகியுள்ளதால், குடும்பம், இளைஞர்கள், சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் ஏற்றதாக உள்ளது.

இதையும் படிங்க : மலையாளத்தில் பெரும் எதிர்பார்ப்பு.. சீக்ரெக் ஆஃப் கலிங்கா எப்போது ரிலீஸ்?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com