பள்ளிக்கு சென்ற 10ஆம் வகுப்பு மாணவி மாயம்.. சிறையில் இளைஞர்.. பெற்றோரே உஷார்!

Schoolgirl Missing : 10-ஆம் வகுப்பு மாணவி மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பள்ளிக்குச் சென்ற சிறுமி மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

Published on: June 14, 2026 at 1:07 pm

சென்னை, ஜூன் 14, 2026: திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் 10-ஆம் வகுப்பு மாணவி மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பள்ளிக்குச் சென்ற சிறுமி மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், பெற்றோர் பட்டாபிராம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், சிறுமி செல்போன் மூலம் ‘ப்ரீ பையர்’ கேம் விளையாடி வந்தது தெரியவந்தது. அந்த விளையாட்டின் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ் (26) என்ற இளைஞருடன் நட்பு ஏற்பட்டது. நட்பு காதலாக மாறிய நிலையில், பெற்றோர் கண்டித்ததால் சிறுமி அந்த இளைஞருடன் சென்றிருப்பது உறுதியானது.

சிசிடிவி காட்சிகள் மற்றும் பிற ஆதாரங்களை ஆய்வு செய்த போலீசார், தினேஷ் சிறுமியை ஆசை வார்த்தைக் கூறி அழைத்துச் சென்றதை கண்டறிந்தனர். உடனடியாக புதுக்கோட்டைக்கு விரைந்த காவல்துறையினர், சிறுமியை மீட்டு, தினேஷை கைது செய்தனர்.

அவர்மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி தினேஷ் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்தச் சம்பவம் திருநின்றவூர் பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் செல்போன் பயன்படுத்தும் போது பெற்றோர் கண்காணிக்க வேண்டும் என கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க தேனி பெரியகுளத்தில் 12ஆம் வகுப்பு மாணவி உயிரிழப்பு.. காய்ச்சல் காரணமா?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com